Monday 21 April, 2008

எண்துறை என்துறை...!


எண்துறையே என்துறையே
எண்ணமெல்லாம் இத்துறையே
எழுச்சிபெற காத்திருக்கும்
எழிலான துறையிதுவே.

நீர்நடுவே நிலமிருந்தால்
தீபென்பர் தீந்தமிழில்
நார்ப்புறமும் நீர்சூழ
தீவாகி நின்றாயே நிறைந்து.

தாய்மொழியாயி தமிழிருக்க
அரசமொழி வேறேனவே
அதைப்படிக்கும் கட்டாயம்
முன்னோர்க்கு நேர்ந்ததுவே.

தாய்மொழி அரசமொழியானபோதும்
ஆண்டவனை போற்றுதற்கு
அம்மொழிக்கு இயலவில்லை
அதுவேன்றோ நமது நிலை!

நிலமதிலே பிறந்தாலும்
நீர்தானே பிழப்பெமக்கு
மீன்பிடித்து வாழ்கின்றோம்
மீள இது போதுமேன்றோம்.

உலகமயம் வியாபாரம் லாபமென
மீன்தொழிளில்போட்டிவர
தொழில்நுட்ப துநையின்றி
தொலைந்திடுவோம் என்றுனர்ந்தோம்.

தொழில்நுட்ப துணையுடன்
தொலைதூரம் தாண்டிச்சென்றும்
மீன்வளம் கரை சேர்த்தோம்நமை
மிஞ்ச இனி எவருண்டு?

உலாகமய மேடையிலே முன்னேற
உழைப்புமட்டும் போதாது
உரிய கல்வி பெறவேண்டும்
உயரவழி காணவேண்டும்.

காலம் கடந்து மட்டும் கல்வி பெற்றோம்
காலம் தாழ்த்தாமல் உயர்ந்துவிட்டோம்
கடல்தாண்டி கண்டங்கள் தாண்டி
'கனவுலகிலும் வந்துவிட்டோம்!

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
வையகம் தொடங்கட்டும் ஊரில் உறவில்
என்ந்துரையில் என்துரையில் தொதங்குவோம்
எம்மவரில் நனவாக்குவோம் நம் கனவுகளை.

இதற்க்கு வடிகாலாக்குவோம் ' எண்துறையை'
இருள் நீக்கும் விடியலாக்குவோமிதை
கிறிஸ்துமஸ் புதுவருட பரிசெனவே
நம்மவர்க்களிதிடுவோம் 'எண்துறையை'




No comments: