அம்மா பாவத்தால் என் ஆன்மா
அழிந்துவிடுமென்றஞ்சுகிறேன்
தாபம் நிறைந்தே நான் உன்னை
அண்டி வருகிறேன் ஆதரி நீ.
நேசத்தாயே இறைமகனை
எமக்கு ஈன்று தந்தாயே
வேந்தனை ஈன்று தந்ததனால்
மாந்தரின் மாதா ஆனாயே.
மதுரமும் சாந்தமும் நிறைந்தவளே
மானிடர் எம்மை ஏற்றருளே
கிருபை தயாபம் உடையவளே
கிறிஸ்துவோடெம்மை சேர்த்தருளே.
1977
Tuesday, 22 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment