Tuesday, 22 April 2008

என்னுடன் பழகும்...

என்னுடன் பழகும் எவரையுமே நான்
எந்த முறையிலும் கேடுத்திடமாட்டேன்
ஏராளமாக நன்மைகள் செய்து
ஏனையோர் வாழ்ந்திட வழிசெய்வேன்.

ஏழைகள் எளியவர் என்பவர் இங்கே
ஏங்கிடும் காட்சி வாட்டுது நெஞ்சை
ஏன் எனக்கேட்க்க ஏழைக்கு எங்கே
ஏட்டுப்படிப்பும் எழுத்தறிவும்?

எழுதத்தெரிந்தால் என்னென்பான்
எண்ணத்தேரிந்தால் எதுவென்பான்
எதுவும் வேண்டாம் இவர்களுக்கே
என்பதுதானே அடக்குமுறை.
1979

No comments: