இசைத்தமிழில் பாடவந்தேன்
இயேசுவையே போற்றி நின்றேன்
தித்திக்கும் சுதனின் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்.
ஏழு சுரங்களால் உனை ஏற்றிடவே
ஏழை எனக்கு அருள் புரிவாய்
தாளங்கள் ராகங்களால் உனைப்பாட
நான் வருவேன் உன்னிடத்தே.
இசை படைத்தாய் உனை ஏற்ற
இலக்கியம் படைத்தாய் உனைப்போற்ற
கலை படைத்தாய் உனைக்காண
எல்லாம் படைத்தாய் எமக்காக.
-1976
Tuesday, 22 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment