Wednesday, 23 April 2008

அஞ்சலி..!

விடுதி சேர்க்க வந்த நண்பன்
விரைந்து திரும்பியதும்
தொலைக்காட்சி செய்தி பார்க்க
தோகைவிரிதிருக்கையிலே...

மேற்கொண்ட பயணத்தை
மேலும் தொடராமல்
திரும்பி வந்த விடுதி நண்பன்
திடுக்கிடும் விபத்தை சொன்னார்.

விரைந்துசென்றேன் விளைவைக்காண
விறைத்துப்போனேன் விதியைககண்டு
விரைந்துவந்த வண்டியொன்று எமனாக
வீதிமகன் விதிமுடிந்து கிடக்க கண்டேன்.

உயிரற்ற உடல் அங்கே
உறவில்லா முகம் அதிலே
மூன்றிடத்தில் மூளை சிதற
முண்டமாக அவன் கிடந்தான்.

கண்டவர்கள் கருணையின்றி கடந்துசென்றார்
காவலரோ ஒன்றும் காணாது போல் நின்றார்
காணவந்த நான் கூட கடைசி அஞ்சலியாய்
கண்ணீர்த்துளி சிந்தி கடந்து சென்றேன்.
பெங்களூர் -1995

No comments: