Tuesday, 22 April 2008

எழுந்தருளே என்னகத்தே...

எழுந்தருளே என்னகத்தே-எந்தன்
எழ்மையினை போக்கிடவே
வந்தருள வையகத்தே -அதன்
வருமைகளை விரட்டிடவே.

பாவத்தை பலமாக பகைத்திருந்தும்
பாவிகளை பரிவுடனே பார்ப்பவனே
மனம் நொந்து மன்னிப்பு பெற்றுவிட்டால்
மறுக்காமல் வருவாயா என்னகத்தில்?

வரவேண்டும் என்னகத்தே
தரவேண்டும் அருட்கொடைகளை
வரவேண்டும் அவனிதனில்
தரவேண்டும் அமைதிதனை.
1977

No comments: