படையல் உணவை புசித்ததில்லையே
இந்நாள் வரையில் எந்த கடவுளும்
பசியால் வாடும் பிள்ளைகள் இருக்க
தாயாம் கடவுள் புசித்ததில்லையே.
பசியின் கொடுமை உணர்ந்தவர் இயேசு
பசிவர பத்தும் பறந்துபோம் எனவே
பழமிலாக்காலம் என்றபோதும் சபித்தார்
அந்த அத்தி மரத்தையே.
இவரே தமது உடலைக்கூட
உணவென தரவும் தயங்கவில்லையே
உயிர்வாழ உணவு தேவை - ஆனால்
இயேசுவின் ஊனுடல் நிலை வாழ்வு தருமே.
பரத்திலிருக்கும் பரமபிதாவிடம்
அனுதின உணவை அளித்திட கேட்டார்
அனுதின உணவில் அடிப்படை தேவை
அனைத்தும் அடங்கும் என்றறிவோம்.
வான்வெளி பறவைக்கு உணவளித்து
வயல்வெளிப்பூக்களை ஆடை உடுத்தி
அழகு பார்க்கும் அன்பு கடவுள்
அவர்தம் மக்களை மறப்பதெங்ஙனம்?
எனவே அவர் மானுடம் பெற்றார்
மானுடனான இறைமகன் இயேசு
தம் ஊனுடல் தந்து நமக்கு
நிலை வாழ்வு அளித்து சென்றார்.
௧௮.0௩.0௮.
Tuesday, 29 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment