Tuesday, 22 April 2008

இனியவளே இரயுமன்துறைத்தாயே...


இனியவளே இரயுமன்துறைத்தாயே
இயற்கையின் இளமை நிறைந்தவளே
இருப்போர்க்கின்பம் அளிப்பவளே
இறந்தோர் உன்னை இழந்தனரே!

தாமிரபரணி உந்தன் தாழ் தழுவ
அரபிக்கடல் உந்தன் தலை வருட
கடற்காற்று உனைஎன்றும் அரவணைக்க
கண்ணை பறிப்பது உன்னழகே!

இளம்காளையர் இளம் மீனவர்
கயல்விழி மாதர் கவின்மிகு மங்கையர்
கதிரவன் ஒளியினில் கடற்க்கரைகாதளர்
கலந்துறவாடுவர் களிப்புருவர்.
1979

No comments: