Wednesday, 23 April 2008

புவிதா பிறந்த நாள்...


புவிதா, பிறந்த நாள் இன்றுனது
புவியில் நீ தோன்றியது நன்றானது
புரியுதா பெயர் பொருள் என்னவென்று
புரிந்துவாழ முயல்க என்றும்.

பெயர் பொருள் புரிதல் நன்று
அதனினும் நன்று வாழ்க்கைப்
பொருள்புரிதல் என்றும்.

வாழ்க்கை பொருள் புரிய
தேடல் வேண்டும்
தேடுவதும் வாழ்வில் வேண்டும்.

வாழ்வென்பது நம் வாழ்வு மட்டுமல்ல
'வாழ்ந்த' பலர் வாழ்க்கையிலும் அதுவுண்டு
தேடு அதை, பின் நாடு அதை நன்று.

கல்வி என்பதும் ஒரு தேடலே
எனவே 'கற்க கசடற'
'கற்றபின் நிற்க அதற்கு தக.'

வாழ்த்த மறக்கவில்லை
வாழ்த்துவதே வாழத்தானே
வாழும் வழி சொல்வதும்
வாழ்த்துத்தானே?

எனினும் வாழ்த்துகிறேன்
வாழ்வாங்கு வாழ்ந்து
வானளாவ வளர்க்க.
[வானுறையும் தெய்வம் போலாக
2008

No comments: