உண்மையில்லா உள்ளங்கள்
உலவிவரும் உலகினிலே
எண்ணமில்லா ஏழைகளை
ஏமாற்றும் எத்தர்களை
என்ன செய்வோம்?
ஏது செய்வோம்?
கள்ளமில்லா காளையர்கள்
கயவர்களை களைந்திடவே
முழுநேர முயர்ச்சியாலே
முறியடிக்க முன்வருவோம்.
நீதிதனை நேர்மைதனை
நிலைநாட்ட நினைத்திடுவோம்
உழைப்பாலே உயர்வடைவோம்
உலகினையே உயர்த்திடுவோம்.
1977
Tuesday, 22 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment