Tuesday, 22 April 2008

பாய் விரித்து படகோட்டி...

பாய்விரித்து படகோட்டி
வலைபோட்டு மீன்பிடித்து
வருமவரை எதிர்நோக்கி
ஏங்கிநிர்க்கும் தாய்க்குலங்கள்.

களைப்புற்று கடல்கடந்து
கரைவந்து சேர்ந்தோர்க்கு
உணவளித்து உபசரித்து
உறங்கவைக்கும் உத்தமிகள்.

கொண்டுவந்த மீன்களையே
கொணர்ந்திடுவாள் சந்தைக்கு
தலைச்சுமையாய் தலைதெறிக்க
ஓடிடுவாள் வழியெல்லாம்.
1979

No comments: