Wednesday, 23 April 2008

கடலை மட்டும்...


கடலை மட்டும் நம்பி வாழ்ந்தோம்
வாழ்வில் கரை இன்னும் சேரவில்லை.
பள்ளிக்கூடம் போனதில்லை-பட்டம்
பதவிகளும் பெற்றதில்லை.

சேமிப்பு செய்ததில்லை-அதனால்
செல்வங்களும் சேர்ந்ததில்லை.
கல்வியின்றி செல்வமின்றி-நம்மை
யாரும் மதித்ததில்லை இன்றுவரை.

கடமை மட்டும் செய்துவந்தோம்
உரிமைகளை மறந்தேவிட்டோம்
இதுவரைக்கும் தூங்கிவிட்டோம்
விழிதேழுவோம் விழிப்புனர்ச்சியுடன்.

அரசியலும் படித்ததில்லை
அரசாள துணிந்ததில்லை
அடிபணிந்தே வாழ்ந்துவிட்டோம்
அடக்கியாள புறப்படுவோம்.

ஒன்றுபடுவோம் ஒத்துழைப்போம்
ஓரினமாய் நின்று செயல்படுவோம்
ஒருவருக்கும் அடிபணியோம்
ஓங்கி நின்றே வாழ்ந்திடுவோம்.
1980

No comments: