Tuesday, 22 April 2008

மலர்வேன் ஒரு குருவாக...

மலர்வேன் ஒரு குருவாக
மகிழ்வேன் அருட்பெருக்காலே
உடலேடுப்பேன் பலிபொருளாக
அளிப்பேன் அதையே பலியாக.

கிறிஸ்துவின் சீடனும் குருவேதான்
மறுகிறிஸ்து என்பதும் அவரேதான்
அப்ப-ரசமதை மாட்றிடுவார்-அதை
கிறிஸ்துவின் ஊனுடல் ஆக்கிடுவார்.

பாவிக்கு பொறுத்தல் அளித்திடுவார்
நோயாளிக்கும் ஆறுதல் அருளிடுவார்
மறையுரை ஆற்றி மக்களையே
மன்னவனண்டையில் அழைத்திடுவார்.

வேறு:

இறைபணி செய்து இன்னலகற்றி
இகமதில் வாழ்ந்து இறைவனைசேர
இறைமகன் இயேசு அழைக்கும்போது
இறங்கிடுவேன் அவர் பின்னாலே.
1979

No comments: