Monday 28 March, 2016

தூத்தூர் வட்டார கலை-இலக்கிய வட்டம்...

                 தூத்தூர் வட்டார கலை-இலக்கிய வட்டம்:              

‘பதிவு செய்யப்படாதவைகள் இல்லாதவைகள்’ என்ற நிலைக்கு வரலாறே வந்து நிற்கும்போது, நாம் நமது எண்ணங்களை, உணர்சிகளை, கலை மற்றும் திறமைகளை பதிவு செய்து நமது உண்மையை/நிஜத்தை நிலைநாட்டியாகவேண்டும், நமது இனத்துக்கு, பகுதிக்கு உயிர்கொடுக்க வேண்டும், பெருமை (‘தோன்றிற் புகழொடு  தோன்றுக – அக்திலர்/ தோன்றலிர் தோன்றாமை நன்று’) சேர்க்கவேண்டும்...

அந்த அரும்பணியில் இன்றேனும் ஈடுபடத்துணிந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் எளிய நன்றியையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் உரித்தாக்கி ஓரிரு சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:

நாம்/நம்மவர்கள் இயற்கையோடு/மூலங்களோடு போராடி வாழ்க்கை நடத்தக்கூடியவர்கள். பாரம்பரிய தொழில்நுட்பத்தில் தொடங்கி விசைப்படகு என்ன, இன்றுவரை கிடைக்கும் அத்தனை தொழில் நுட்பங்களையும் சாதுரியமாக பயன்படுத்தி ஆழ்கடல் சென்றும் மீன்பிடித்து தன்மானத்தோடு வாழ்பவர்கள். காலங்கள் கடந்துதான் கல்வி நம்மிடையே வந்தபோதும் அதையும் மிகத் திறமையாக கையாண்டு நமது இளைஞர்கள் அனைத்துத் துறைகளிலும் தங்கள் கைவண்ணம் நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த இனம் சென்ற ஐந்நூறக்கும் மேல் வருடங்களாக கத்தோலிக்க மதக் கோட்ப்பாட்டின்கீழ்தான் இருந்துவந்தது. நிலப்பகுதியின் ஓரத்தில், நம் வாழ்வாதாரமான கடற்கரையிலேயே வாழவேண்டிவந்த நம்மை பொதுசமூகத்தோடு கலந்துறவாட விடாமல் கூண்டுக்குள் அடைத்த பறவைகளாக, கிணற்றுத் தவளைகளாக ஒதுக்கி ஓரங்கட்டிவந்தது, சுரண்டிவந்தது... அனைவரையும் கட்டாய மறைக்கல்வி மற்றும் ஞாயிறு திருப்பலிக்கு திணித்த கத்தோலிக்க மத/சபைத் தலைமை நம்மவரை படிக்க ஊக்கப்படுத்தாமல் பாமரராகவே வைத்திருந்தது... உயர்க்கல்வி, தொழில்நுட்ப கல்விமுறையை நமக்கு தராமல் தொடக்கக் கல்விமட்டும் பெயரளவுக்குத் தந்து சமரசம் செய்துகொண்டது. நமது அந்தரங்க வாழ்க்கையைக்கூட அதுவே நிர்ணயித்தது, அங்குகூட நமக்கு ஏதேனும் சொல்ல இருக்கிறதா என்றுகூட கவலைப்பட்டதுகிடையாது, எவ்வாறேனும் யாராவது அப்படியொன்று சொன்னால் அதை பொருட்ப்படுத்தியதுமில்லை... நமது செலவில் வாழ்ந்து, அது நம்மையே ஆட்டிப்படைத்தது!

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரே தவறை நாம் திரும்பவும் செய்துவிடக்கூடதே, அப்படி நாம் இன்னும் பின்தங்கிய சமூகமாக சித்தரிக்கப்படக்கூடாதே என்பதற்காகத்தான். நாம் வயதுக்கு வந்துவிட்டோம். நமது எதிர்காலத்தை நாமே நிர்ணயம் செய்யும் பக்குவம் பெற்றுவிட்டோம். தேவைக்கேற்ற அறிவு நமக்குண்டு. இன்னும் வேண்டுமானால் தேடிக்கொள்ளலாமே தவிர யாரையும் மூடமாக நம்பவேண்டாம், மதத் தலைமையைக்கூட...

இங்கு சொல்லிவருவது [இதுவரை சொல்லிவந்தது] மதத்தலைமையை நிராகரிக்க வேண்டும் என்றல்ல, மாறாக அதைச்சார்ந்தும் வாழவேண்டாம் என்றே. மதம் ஒரு தனி மனிதனுக்கும் அவனது கடவுளுக்கும் இடைப்பட்ட விஷயம். அங்கே ஒரு இடைநிலை நிச்சயம் தேவை இல்லையல்லவா? கடவுளை ஒரு நேர்மையான, நீதியுடைய சாதாரண மனிதனைவிடவும் மோசமாக மதங்கள் காட்டுகின்றன, எனவேதான் இந்த இடைநிலை... இதைச் சொல்லும்போது மத சடங்குகளை, சமூக சம்பிரதாயங்களை வேண்டாம் என்றுமல்ல, மாறாக அவற்றுக்கு தெய்வீகம் பூசவேண்டாம் என்றுதான்... குருக்களின்/அர்ச்சகர்களின் சுரண்டலுக்கு நின்றுகொடுக்க வேண்டாம் என்றும்தான்... மதங்கள் பேதைகளுக்கு, அறிவிலிகளுக்கு, பாமரருக்குத்தான், படித்தவர்களுக்கல்ல என்றெல்லாம் சொல்வது ஏன்?  

மதங்கள் மடிந்து ஆன்மீகம் மலரவேண்டிய நாட்கள் வந்துவிட்டன.  இயேசுவினுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்: ‘காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்.’ (Jn 4:23). இன்னும் “கடவுள், உன் தந்தையையும் தாயையும் மதித்து நட...’ என்றும் உரைத்திருக்கிறார். ஆனால் நீங்கள், ‘எவராவது தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘உமக்கு நான் தரக் கடமைப்பட்டிருக்கிறது கடவுளுக்கு காணிக்கையாயிற்று’ என்றால், அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.”(Mt 15:4-6). ‘கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக்கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோரதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் செலுத்த முடியாது’ (I Jn 4:20). ‘மிகச் சிறி யோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்... எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை...’ (Mt 25:40, 45). இதுதான் ஆன்மிகம், சடங்கு-சம்பிரதாயங்களுக்கு அப்பாற்ப்பட்ட மனிதநேய தெய்வீகம், இதுவே யேசு போதித்த இறையரசின் தன்மை...

இந்த வகையில் நாம் கல்வி கற்க வேண்டும். நமது பிள்ளைகள் அனைத்து துறைகளிலும் நிபுணர்களாகவேண்டும் – பொறியியல், மருத்துவம், சட்டம், தகவல் தொழில் நுட்பம் என அனைத்துத் துறையிலும் நாம் சிறக்க வேண்டும், திறமை காட்டவேண்டும். நாம் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல என நிரூபிக்கவேண்டும். நமது செல்வங்களை பிள்ளைகளில், அவர்களது கல்வியில் சேமிப்போம், அல்லாமால் திருமணச்சந்தைகளில் அல்ல, அதன் வரதட்சணை மற்றும் சீர்வரிசைகளிலும் அல்ல, ஆணவத்தின், தற்பெருமையின் அடையாளமான, தேவையற்ற பெரிய பங்களாக்களிலும் அல்ல.. நமது இளைஞர்கள் வரதட்சணை ஒழிக்க முன்வரவேண்டும், ஏனெனில் அது தன்மானத்துக்கு, சுய மரியாதைக்கு எதிர்மாறானது... நமது கிராமங்களில் ஏழ்மை ஒழிப்போம், தூய்மை-துப்புரவாக இருப்போம், முதிர்க்கன்னிகள் இல்லாத காலம் உருவாக்குவோம்...

22.02.2016, செவ்வாய்க்கிழமைய ‘தி இந்து’ ஆங்கில தினசரி 11-ன்றாம் பக்கத்தில் From sabhas to fishing villages’ என்ற T.M. கிருஷ்ண எழுதிய கட்டுரை ஓன்று உண்டு. அதில் ‘கலைகளுக்கு எல்லை இல்லை’ என்று சொல்லும்போதும் அவற்றுக்கும் எல்லை உண்டு என்றும் அது மாறவேண்டும் என்றும் அவர் கூறுவதுடன் நின்றுவிடாமல் கலைகளை சாதாரண மக்களிடையே, நம் போன்ற மீனவர்களிடையே, எடுத்துசென்று கலைகள் ஒப்பிட்டுபார்க்கவேண்டியவை என்பதற்கு மேல் ரசிக்கவேண்டியவை எனக் காட்டி வெற்றியும் பெற்றிருக்கிறார். கலை-இலக்கியங்களுக்கும் கலாச்சாரத்துக்கும்/பண்பாட்டுக்கும் நிறையவே தொடர்புண்டு... ஒரு கலாச்சாரத்தை இன்னொரு கலாசாரத்துடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாதென்பர். இருந்தும் ஒப்பிடுதல் நடக்கவே நடக்கிறது. அப்படி வரும்போது நாம் எங்கே, நமது கலாச்சாரம் எங்கே? நமக்கென ஒரு கலை வடிவம் இருப்பதாக தெரியவில்லை, கரைமடி இழுக்கும்போது பாடும் ‘ஏல’, தவக்காலத்தில் பாடும் ‘சிந்து’, இறந்தோரை நினைத்து பாடும் ‘ஒப்பாரி’ போன்றவை தவிர... நமது எண்ணங்களுக்கும் உணர்சிகளுக்கும் கலை வடிவம் கொடுக்கலாமே, அங்ஙனம் நமதென ஒன்றை அடையாளம் காட்டலாமே... அடையாளம் இல்லாத இனம் அழிந்துபோம் விரைவில்...

நாம் எதற்கெல்லாமோ செலவு செய்கின்றோம். நம்மை ஒரு இனமாக அடையாளம் காட்டும் எழுத்து, கலை போன்றவற்றிற்கு திட்டவட்டமாக ஏதேனும் கௌரவமாக செய்து நம் இனத்தின், சமுதாயத்தின் ஆளுமையை, தனிமையை நிலைநாட்டுவோம், பேணுவோம், வளர்ப்போம்... இவ்வேளையில் நம்மூர் பெண்மணி அஜிதா பர்ணபாஸ் ஓரிரு நாட்களுக்குமுன் ஔவையாரின் ‘ஆத்திச்சூடியை’ ‘கவின்’மலையாளத்துக்கு  மொழிமாற்றம் செய்திருப்பது போற்றத்தக்கது... ஏற்கனவே நம்மவர்கள் நிறைய பேர் இலக்கிய உலகுக்கு களம் இறங்கிவிட்டார்கள்... அது இன்னும் கலை உலகத்துக்கும் வந்தாகவேண்டும்... அங்ஙனம் நம் இனம் வரலாறு போற்றும் இனமாகவேண்டும்...

இங்கே கல்வியாளர், எழுத்தாளர், சாகித்ய அகாடமி விருது பெற்ற பொன்னீலன் அவர்களது சில கவலைகளை/எச்சரிக்கைகளை கவனிப்போம்: ‘...ஒரு மாயப்பெட்டி வந்திருக்குது. மனுசனை யோசிக்கவிடாது, பேச விடாது... அந்த மாயப்பெட்டி டி.வி.பெட்டி... நல்லது காட்டினா பரவால்லே. எப்ப பார்த்தாலும் காதல், காதல், காதல். மனுசனுக்குக் காதலைத்தவிர எதுவும் இல்லையா? எத்தனை விஷயங்கள் இருக்கின்றன. உலகத்தின்மீது காதல் கொள், கொள்கையின் மீது காதல் கொள், மனித இனத்தின் மீது  காதல் கொள். உன் வெற்றிக்குக் காதல் கொள். படிப்பின் மீது காதல் கொள்...
எவன் புத்தகத்தைப் படிக்கிறானோ, அவன் உலகத்தைப் படிக்கிறான். ஞானத்தைப் படிக்கிறான். அறிவை விருத்தி செய்து கொள்கிறான். ஆன்மாவை வளர்த்துக் கொள்கிறான். வேறு எந்தப் படிப்பும் புத்தகப் படிப்புக்கு இணையாகாது... புத்தகத்தின் மூலமாக வாழ்வைப் படியுங்கள். புதிய வாழ்வுக்காக நீங்கள் தயாராகுங்கள்...

நூலகத்தை நன்றாகப் பயன்படுத்துங்கள். எந்த பள்ளிக்கூடத்திலும் இல்லாத அறிவு, எந்த ஆசிரியராலும் சொல்லித் தர முடியாத அறிவு நூலகத்தில் கட்டாயம் இருக்கும். நூலகத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் நீங்கள் படித்ததில் பொருள் இல்லை...’ (‘சிறகிசைத்த காலம்’ p. 32, தொகுப்பு: பேரா. வே. நெடுஞ்செழியன், பவா. செல்லத்துரை; அகம், சென்னை, 2003).

நமது பகுதியில் நூலகங்கள் அமைப்போம், ஒவ்வொரு வீட்டிலும் செய்தித்தாள்கள் வாங்குவோம், வாசிப்போம். பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் பரிசாக நல்ல புத்தகங்களையே கொடுப்போம். ஒவ்வொரு ஆண்டும் கலை-இலக்கிய விழாக்கள் நடத்தி, சிந்தனையாளர்களை, படைப்பாளிகளை (எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள்) பங்கேற்க செய்து நம் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு எழுசியூமூட்டுவோம்... அந்த வகையில் நீங்கள் தொடங்க நினைக்கும் கலை-இலக்கிய அமைப்பு நிச்சயம் நமக்கு பெருமை சேர்க்கும்.  வாழ்க நம் இனம்! வளர்க தமிழ்!!

-   பணி. பங்கிறாஸ் அருளப்பன்
     (திருவனந்தபுரம் 28.02.2016)               தூத்தூர் வட்டார கலை-இலக்கிய வட்டம்:              

                                                                                 (திருவனந்தபுரம் 28.02.2016)            

No comments: