Saturday 21 August, 2010

வெள்ளிவிழா தம்பதியற்கு...


இருபத்தைந்தாண்டு இல்லறம்
இனிதே நடத்தி, இசைபட வாழ்ந்து
இருபெரும் மக்களை உலகுக்களித்து
இறைவன் அருளை என்றும் பெற்று
இன்னும் சிறக்க வேண்டுகிறேன்.

திருவாங்கூர் தலைநகராம்
திருவனந்தபுரம்தன்னை
அணிசெய்ய அழகு செய்ய
தைக்காடு வந்த தமிழ் தட்டார்
நாடு விட்டனர், வீடு விட்டனர்
விசுவாசம் மட்டும் விடவில்லை.

'கோயிலில்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம்' என்று
கோயில் செய்து அன்னைக்கு அர்ப்பணித்து
அவள் மகனாம் இயேசுவழி வாழ்கின்றனர்.

கோயில்காக்கும் தர்மகர்த்தா
வழித்தோன்றிய தம்பி டொமினிக்
உறவுமுறையான ராஜி அக்காவை
வாழ்க்கை துணையாக்கி
வாழ்வாங்கு வாழ்ந்து
வெள்ளிவிழ கொண்டாடும் வேளை
பொன்விழா காணும் வரை
பொலிவுடன் வாழவேண்டும்
பார்பவர்கள் போற்றவேண்டும்.

பொற்கொல்லர் பரம்பரை என்றாலும்
கலையெல்லாம் கைவசமே
இசைக்கலைகூட கைவந்த கலையே.
நரம்பு வாத்திய வித்தகர்
தம்பி டொமினிக்
வாழ்விலும் இசைமீட்டி
இசைபட வாழ வாழ்த்துகிறேன்
இறைவனை வேண்டுகிறேன்.

நட்புடன்


பங்கிராஸ்
௨௧.௮.௨0௧0




No comments: