Tuesday 12 August, 2008

ஒரு பள்ளிக்கூடமும் ஆறு மரணங்களும் சில அவலங்களும்...[தொடர்ச்சி-௨]

பிறகு எத்தனையோ அமர்வுகள் நடந்தும் ஒன்றும் நடக்காதபோது, ஆயரின் ஒன்றுக்கு ஒன்று என்ற விகித அடிப்படையில் பணி நியமனம் நடத்த மேலாளராகிய நான் பள்ளியின் நலன் கருத்தில்கொண்டு கட்டாயப்படுத்தப்பட்டேன். எனவே, தூத்தூரில் உடல்பயிற்ச்சி ஆசிரியர் பணிக்கு ஆள் இல்லாததாலும், அதே பணிக்கு சின்னத்துறையில் மூன்றுபேர் இருந்ததாலும் அவர்களை அந்த பணியிடத்திற்கு ஆள் தருமாறு கேட்டு கடிதம் பல எழுதியும் பதில் எதுவும் தராததால் ஐந்து மாதங்களுக்கு பிறகு அக்டோபர் மாதம் சின்னத்துறையை சார்ந்த வயதும் பணி அனுபவமுமுடைய ஒருவரை நியமித்தேன். இன்னொரு பணியிடத்தை தூத்தூரிலுள்ள தகுதி வாய்ந்த ஒருவருக்கும் கொடுத்தோம்.
அன்றே இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். ஆயர், தூத்தூர் பங்கு தந்தை, பள்ளி தலைமை ஆசிரியர், புதிதாக நியமிக்கப்பட்ட இரு ஆசிரியர்கள் என ஐந்துபேரை பிரதியாக்கினர். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போதே அவ்வப்போது தொல்லைகள் பல கொடுத்துவந்தனர். இவற்றில் சில போலீஸ் நிலையங்கள் வரை சென்றதுண்டு.
இதன்பிறகு நடந்த சுற்றுலாவிற்கும் சின்னத்துறை பங்குத்தந்தை வரவில்லை.
இப்படியிருக்க, ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி நாலாம் ஆண்டு ஜனவரி மாதம் தூதூரில் ஸ்டீபன் சாமியாரின் தாய் இறந்துபோக அடக்கவந்த ஆயரிடம், "இந்த பிரச்சினைக்கு முடிவு எடுக்காத நிலையில் என்னை அங்கேயிருந்து மாற்றும்படி கேட்டும் பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார். அன்றுதான் பள்ளி ஆண்டு விழாவும்கூட. இதற்க்கு கொடிஏற்ற வேண்டிய சின்னத்துறை பங்குத்தந்தை வரவில்லை. அதற்க்கு பதிலாக அங்கிருந்து ஒரு கும்பல் வந்து பள்ளி வாயிலில் வைத்திருந்த அலங்காரங்களை கிழித்தெறிந்து அலங்கோலப்படுத்தினார்கள். இந்த நிலையில் ஆண்டு விழா நடத்துவது நல்லதல்ல என்று ஆசிரியர்கள் ஒன்றாக கேட்டுக்கொண்டதால் விழா மாறறிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒருகூட்டம் மாணவர்கள் போராட்டமும் நடத்தினர்.
ஏறக்குறைய ஒரு வாரத்திர்க்குபிறகு தூத்தூரில் ஆகத்தம்மாள் குருசடி திருவிழா நடந்துகொண்டிருக்க, விழா நாளான பெப்ருவரி மாதம் ஐந்தாம் நாள் காலையில் தூத்தூரிலுள்ள ஒரு கல்யாணம் காஞ்சம்புரம் கோயிலில் நடக்கவுள்ளதால் அங்கே போய்க்கொண்டிருக்கும்போது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கியது. அவசரம் காரணமாக அவர்களும் பொருட்ப்படுத்தாமல் செல்ல, போலீஸ் தலையிடவேண்டிவந்தது. இதற்கும் மேலாக போலீஸ் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் இருக்கும்போதே மத்திய நேரம் ஒரு பெரிய கும்பல் ஆயுதங்களுமாக சற்றும் எதிர்பாராத தூத்தூர் மக்களை தாக்கினார்கள். எப்படியோ அவர்களும் நிதானித்துகொண்டவர்கள்போல் வந்தவர்களை சுற்றிவளைத்து தாக்கியிருப்பார்கள்.

No comments: