Tuesday 3 December, 2013

இரயுமன்துறை புனித லூசியாள் திருவிழா

இரயுமன்துறை புனித லூசியாள் திருவிழா 

கொடியேற்று (04.12.2013, புதன்):
பங்கு, பங்கின் வளர்ச்சி மற்றும் இறை விசுவாசம்
எசாயா 12:1- 6('மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்...')
யோவான் 14:6-14 ('வழியும் உண்மையும் வாழ்வும் நானே... என்னை காண்பது தந்தையை காண்பது ஆகும்...)

பங்கு: இயேசுவின் சீடர்கள் 'புதிய-கிறிஸ்தவ, கடவுளின்- நெறி' (திருத்தூதர் பணிகள் 9:2; 18:26; 19:23)யினர்.
இதுவே 'மீட்பின் வழி' (16:17)என்றும் கூறப்பட்டது.

சீடர்கள் 'கிறிஸ்தவர்கள்' எனப்பட்டது 11:26 அந்தியோக்யாவில்...

திருச்சபை: மத்தேயு 16:18- பேதுரு = பாறை, பாறைமேல் திருச்சபையை கட்டுவேன்...
அ.ப 8:1- எருசலேம் திருச்சபை; 8:3 திருச்சபையை அழித்து வந்தார்...
14:23 ஒவ்வொரு திருச்சபையிலும்...
20:28 திருச்சபையை மேய்ப்பதற்கு...கண்காணிப்பாளர்களை...

சீடர்கள் சித்திரவதை படுத்தப்பட்டனர்...
தலைமறைவாகினர்... பாதாள கல்லறைகளில்...
வெளி உலகிற்கு வந்தது கான்ஸ்டன்டைன் பேரரசர் ஏற்றுகொண்டபிறகு...
தொடர்ந்து அதிகாரம், அந்தஸ்து, ஆட்சி என்றெல்லாம் கிடைக்க அரண்மனை, பேராலயம் என எல்லா வசதிகளும்...
அதிகார வட்டாரங்கள் - ஆட்சி பகுதி- மறை மாவட்டம், வட்டாரம், பங்கு என...

பங்கின் வளர்ச்சி: வசதிகள் அல்ல, மாறாக அவசியங்கள் நிறைவேறும் நீதியான அமைப்புக்கள்... சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைநிற்கும் நிலை ...

விசுவாசம்: கடவுளில் என்பதைவிட சகோதரரில்... அயலானில்...
நம்பிக்கைக்குரியவர்கள் ஆவோம்...

தந்தையோடு தம்மை இணையாய் ஒப்புவித்தவர் மனிதர்களோடும் அவ்வண்ணமே செய்தார்..

மனிதனை நம்புவது கடவுளை நம்புவதாகாதா? அவனை நம்பாமல் கடவுளை நம்ப இயலுமா?

[முதல் வடிவம் மட்டும்... 02.12.2013]

No comments: