Saturday 6 November, 2010

நாற்பது வருடங்களுக்கு பிறகு...


அன்பு நண்பர்களே,


வணக்கம்!

வாழ்த்துக்கள்!


நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்துடன் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், அதையே விழைகிறேன், அதற்காக ஜெபிக்கிறேன்.


நாற்பது வருடங்களுக்கு முன் பிரிந்த ஒரு நண்பன் எழுதும் கடிதம்! நம்மில் ஒரு சிலரை சிலவேளைகளில் பார்த்திருக்கிறேன். ஒரு சிலரை அதன் பிறகு பார்த்த ஞாபகம்கூட இல்லை! நமது ஒரு சிநேகிதி, லில்லி மேரி, இன்று நம்மிடையே இல்லை! நிறைய பேர்களது பிள்ளைகளுக்கு கல்யாணமாகி ஒரு சிலராவது தாத்தாக்கள்/பாட்டிகள் கூட ஆகியிருக்கலாம்!


அன்று பிரிந்த நாம் இனி என்று ஓன்று சேர்வோமோ? அதற்காக ஒரு சந்தர்ப்பம் ஏற்பாடு செய்வதை நாம் அனைவரும் விரும்பி ஏற்போம் என்பதால் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்பாடு செய்ய, இந்த நாற்பதாம் வருடம் நாம் ஏன் சிந்திக்ககூடாது? அதற்காக நாம் ஏன் ஒரு தடவை ஓன்று சேரக்கூடாது? இந்த கிறிஸ்துமஸ் - புது வருட விடுமுறை நாட்களில் அப்படி ஒரு கூட்டம் கூடுவோமா, குறிப்பாக டிசம்பர் இருபத்தியாறு முதல் முப்பது முடியவுள்ள ஏதேனும் ஒரு நாள் மதியத்துக்கு பிறகு கூடி இந்த நாற்பதாவது வருட நிறைவு விழா பற்றி சிந்திக்கலாமே? உங்களது வசதிகளை தெரியப்படுத்துங்கள். நமது பதினோராம் பயஸ் பள்ளியிலேயே கூடலாமென்று நினைக்கிறேன்.


உங்களது அபிப்பிராயங்களை ஒரு வாரத்துக்குள் தெரியப்படுத்தினால், நிதானமாக எல்லாம் ஏற்ப்பாடு செய்ய வசதியாக இருக்கும்.


வாருங்கள், பழைய நினைவுகளை அசைபோட, அனுபவங்களை பகிர்ந்துகொள்ள, புது தெம்பும், பொலிவும் பெற...


உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்,


நண்பன்,

பங்கிறாஸ்.

1 comment:

John Fredy said...

மிகவும் என்னைக்கவர்ந்தது இந்த உன்னதமான சிந்தனை.
நீங்கள் எல்லோரும் பகிர்வில் ஈடுபடும்பொழுது
எனக்கும் ஒரு வாய்ப்பு தந்தால் - உங்களுக்கு தேவையான் புகைப்படம்
எடுத்து கொடுப்பேன். அவற்றிலும் மேலாக இந்த அரிய செயலை பார்த்து பின்பற்றவும் வாய்ப்பாக அமையுமென நம்புகிறேன்.