Sunday 8 February, 2009

கடையின் கதை [தொடர்ச்சி - ௩]

இருபத்தினாலாம் தேதி: 'மீனவ பல்பொருள் அங்காடி' மிகையாகாது என்று 'மக்கள் பேரங்காடி'எனப் புதிய பெயர் சூட்டினோம். வேகமாக உன்னை மேடையேற்ற நினைத்தோம். ஆயிரம் ஆயிரம் அம்புகள் வந்தாலும் அப்புறப்படுத்தும் நாங்கள் எங்களுக்குள்ளிருந்து வந்த அம்பை தடுக்க தாமதித்தோம். ஆம், எங்களின் அனைத்து எண்ணங்களையும் அறிந்தவர்கள் எங்களை குமுற செய்தார்கள். யார் என்ன பெரிய தீங்கு செய்தாலும் தாங்கும் எங்கள் உள்ளத்தில் எங்களுடன் இருந்து தாக்கும் நண்பர்களின் வார்த்தையை தாங்கமுடியவில்லை. மகளே உனக்கு யார் பொறுப்பு என்றார்கள். தாங்குமா எங்கள் நெஞ்சம்? உன்னை பதினொன்று பேர் ஈன்றெடுத்து இருபத்திநாலு பேரால் பாசமாக வளர்த்து ஒன்பது பேர்கள் கோட்டைகட்டி காத்த உனக்கு இன்னும் யார் பொறுப்பு? ஆம், அவர்களுக்கு எங்கள் வேதனை எங்கே தெரியப் போகிறது? அனுபவித்தவர்கள் நாங்கள் அல்லவா? அதனால் இதையும் சேர்த்து அனுபவித்தோம். உனக்கு நாங்கள் பொறுப்பு என்று துணிந்து சொல்லிவிட்டோம். பெற்ற குழந்தையை குழி தோண்டி புதைக்கும் கலியுகம். பெண்குழந்தை என்றறிந்து பேணி காக்கும் இந்த புது யுகம் காணத்துடிக்கும் நாங்கள் உன்னை மறப்போமா? இல்லை, அந்த சொல்லிர்க்கே இடமில்லை. எண்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையில் எங்களிடமிருந்து அகன்று சென்றார்கள். எல்லோரையும் மதிக்கும் அண்ணனின் மனம் மௌனமானது. அந்த மௌனத்தில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள், எத்தனை எத்தனை கேள்விகள், எத்தனை எத்தனை எத்தனை சாட்டையடிகள்? மௌனத்தை கலைக்க நாங்கள் எடுத்துக்கொண்ட முயர்ச்சிகள்தான் எத்தனை எத்தனை? கோபமென்றால் தாங்கலாம். அந்த மௌனத்தை தாங்கமுடியவில்லை. இதன் முதல் அடியே அவரின் கருத்துக்கள் தானே? மன்னித்தார், மனம் திறந்தார்; மகிழ்ந்தோம்.
உன் நினைவு வரும்போது எங்கள் உள்ளத்தில்தான் எத்தனை எத்தனை இன்பப் பெருக்கு? உன்னை மனத்தில் நினைத்தாலே எங்கள் மனக்கவலை மறக்கிறது. உன்னை மூன்றாம் தேதி கொலுவிருத்த நாங்கள் கொண்ட பணிகள் தான் எத்தனை? நாங்கள் அலைந்தோம் உன்னிடம் மற்றவர்கள் பங்கு சேர்ந்து மகிழ. எங்கள் பசியும் பஞ்சாக பறந்தது. வழியில் நிலக்கடலை வாங்கி சாப்பிட்டு நிலம் பார்த்து நடந்தோம். பள்ளிக்கூடம் சென்றோம், பாசமுடன் வரவேற்றார்கள். அவர்களின் உற்சாகமான வார்த்தையில் உள்ளம் குளிர்ந்தோம். சில எதிர்ப்புகள் எதிர்த்துநின்றோம். மீண்டும் மகளே உனக்காக அலைந்தோம். உன்னை கல்லூரியிலும் அறியவேண்டுமென்று சென்றோம். கற்றோர்கள் கனிமொழி கூறினார்கள், பாராட்டினார்கள், ஆசீர் வழங்கினார்கள். கல்லூரியிலும் கல்மனம் படைத்தவர்களை காண முடிந்தது. காட்டமாக பேசினார்கள், கலங்கினோம். உச்ச வெயிலில் உதவியில்லாமல் அலைந்தோம். எத்தனை தடைகளை வேண்டுமானாலும் தாண்டும் அண்ணனின் கால்கள் நடக்க மறுத்தது. ஒரு அடி கூட எடுத்துவைக்க கால்கள் மறுக்கவே மரநிழலில் உட்கார்ந்தோம். நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டிக் காக்கும் இதன் எதிர்காலத்தை நம்மைப் போன்று நல்ல முறையில் நடத்துவார்களா? நாம் நினைத்த அளவில் பங்குதாரர்களிடமிருந்து பணம் கிடைக்குமா? என்ற கேள்வி சுமை தாங்கியான, அடித்தளம் அமைத்த அன்பு அண்ணனிடமிருந்து எழுந்தது. பாசமிகு அண்ணனை தேற்ற நினைத்தோம், வார்த்தைகள் வரவிலை. ஆம் அந்த கேள்வி நியாயம்தானே? பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை!
'யாழினிது குழலினிது என்பர்- மக்கள்தம்
மழலை சொல் கேளாதவர்.'
மலடிக்கு எங்கே தெரியப் போகுது பேறுகால வேதனை? அதை நினைத்தபொழுது வேதனை நெஞ்சை வாட்டியது. பசி தோன்றாத எங்களுக்கு பசி எடுத்தது. ஆறுதலின்றி மரத்தடியில் சாய்ந்த எங்களுக்கு இயற்கையே ஆறுதல் அளித்தது. வழியில் வந்த நண்பர் பசிபோக்க பழம் வாங்கி kodutthaar. வீதியில் போன ஒரு நபர் விரும்பி வந்து பங்கு கேட்டார். புத்துணர்வு பெற்றவர்களாய் மீண்டும் நடந்தோம்.

No comments: