Friday, 27 March 2015

B'day - Deepak



தீபக் கண்ணா உன் பிறந்தநாள் இன்று
தீபமாக பிறந்தாய் எமக்கு நீ அன்று
வானுயர வளர்க தீபமாக என்றும்...

தமக்கையர் மூவருக்குப் பின்
பெற்றோரின் தவப்பயனாக பிறந்தாய்
தரமான தங்கம்போல் வளர்ந்தாய்
வளமான வாலிபம் அடைந்தாய்...

அழகும் அறிவும் ஒருங்கே பெற்றாய்
கசடற கற்க ஏனோ தவறி விட்டாய்
பாதியிலே பட்டங்களை இழந்து நின்றாய்
வேலைவாய்ப்பதனால் நழுவக்கண்டாய்...

சோர்வு வேண்டாம் சோகமும் வேண்டாம்
‘யானைக்கு பலம் தும்பிக்கையிலெ’னில்   
‘நமக்கு பலம் நம்பிக்கையில’ன்றோ...
நம்பிக்கையோடு நாளும் போராடு
வெற்றியுனது ஒருநாள் நிச்சயமே...

நிறைகள் உனக்கு ஏராளம் போல்
குறைகளும் சிலவை நமக்குண்டு
அவற்றையுணர்ந்து சரி செய்தாலே 
உனக்கும் பிறர்க்கும் வாழ்வாமே...

உடற்கட்டு உடற்வாகு மேலும்
முகச்சவரம் சிகை அலங்காரம்
ஆடை அணிகலன் காலணிபோல்
‘மனதில் உறுதி’யுடன்
‘வாக்கினிலே இனிமை’யுடன்
ஒருமுகமாக முயன்றாலே
ஒருபோதும் தோல்வி காணாய்....

நம் வாழ்க்கை நம் கையில் மட்டுமன்று  
அதற்கும் மேலே ஒன்றுளது நிச்சயமே
அதன் அருளும் வழிநடத்துதலும்
நாளும் வேண்டும் யாவர்க்கும்
நாள்தோறும் தவறாமல் வேண்டுவமே...

இந்த இனிய பிறந்த நாள்
உனக்கு வாழ்க்கை திருப்பமாகட்டும்
எங்கள் ஆசீரும் அவர் அருளும்
ஒருசேரப்பெறுக, வெற்றி வாகை சூடுக
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

-மாமன்
7.3.2015

No comments: