கமிதாக்கண்ணு,
உனது மற்றும் புவிதாவின்
பிறந்தனாளின்று...
பரிசுகளும் பதக்கங்களும்தர
தகுதியுண்டு உனக்கு...
காரணம், கடைசியில் நீ
வாழ்க்கையை உணர்ந்துகொண்டாய்...
புகுந்தவீடுதான் நிரந்தரமென்று
இன்றல்ல, நேற்றல்ல, ஆதியாகம
நாட்களிலிருந்தே சொல்லப்பட்டதை.
இப்போதாவது புரிந்துகொண்டாயே...
ஒருவகையில்
உன்னைப்போலவே மாமனும்
ஏழ்மைவிஷயத்தில்...
எடுபிடியாக பேசுவதில்...
ஆனால்
இதயத்தில் சுத்தமானவர்கள்
எதையும் தாங்குவதில்
எவருக்கும் இளைத்தவர்களுமல்ல...
எனவே, நிலையான நிம்மதி
நமக்குமட்டுமே சொந்தம்
அதுவன்றோ நிஜமான பரிசு,
பார்போற்றும் பதக்கம்...
அவற்றை நிறைவாகத் தந்து
உன்னை நிழல்போல் இன்றும்
என்றும் தொடர இறைவனை வேண்டி
பிறந்த நாள் வாழ்த்தும்
-மாமன்
29.01.2015
புவிதாக்கண்ணு,
பிறந்தநாள் உனது இன்று...
பிறநாள் போலன்று
கொண்டாடுவோம் நன்று...
அனைத்திலும் அமைதி காத்தாய்
ஆண்டவரருள் பெற்றாய்
வாழ்க்கை துணையெனவே
வினோதை தந்தார்
வாழ்நாளெல்லாம் ஆனந்தமடைய...
வினோதம் மனமகிழ்விற்கு
கொண்டாட்டமும் அதனாலே
வினோதும் உனக்களித்தது அதுவே...
ஆனந்தத்தின் சிகரமென
ஆராத்யா எனும் அழகு தேவதையை
ஆராதனைக்குரியவளாக அவர் தந்தார்...
அங்ஙனமே வளர்த்துக அவளை
அகிலமும் போற்றிப்புகழும் வண்ணம்...
நிறைவாழ்வென்பது சுலபமல்ல
அதுகிடைத்தல் வாழ்க்கைப்பேறு...
அப்பேறுபெற்றாய் அத்தோடு
மகப்பேறும் சேர்த்தே பெற்றாய்
பிறந்தபயனையடைந்தாய்
மாதவம் செய்தவளாக...
நன்றிசொல்ல வார்த்தை வேண்டாம்
நன்றியாகும் வாழ்வு வேண்டும்
அதுவே ‘வாழ்வாங்கு வாழ்வு...
வானுறை தெய்வ’த்தோடு வாழ்வு...
பிறந்து, வளர்ந்து, மணந்து, ஈன்று
நிறைவாழ்வெனும் பெருமைபெற்ற
புவிக்கு மாமனின் இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இன்றும் என்றும் எவ்விடமும்!
பங்கிமாமா/29.01.2015
No comments:
Post a Comment