அமுதக்கண்ணே, ஆருயிர்ப்பொன்னே
என் பிறந்தநாளைக்கூட மறந்தாலும்
உன் பிறந்தநாளை நான் மறக்கலாமா...
அப்படியே மறந்த என்னை கூப்பிட்டு
வாழ்த்தக்கேட்டாயே, என்னென்பேன்
உன் பெருந்தன்மையை, ‘பேதமை’யை!
அதுவன்றோ எம் அருமை மகள்
அழகு மகள் அமுதாச் செல்லம்
மனம் நிறைய வாய் நிறைய
வாழ்த்துகிறேன் காண்ணே உன்னை...
ஓய்வின்றி அலுவல்பல செய்ததனால்
சோர்ந்துபோனேன், இன்றைய அலுவல்
முடிவாகாமல் முடங்கி நின்றேன்...
முடுக்கிவிட்டாய் உன் பேச்சால்...
உன் மனம் பனிமலர்
உன் பேச்சு நறுமணம்
நீயே தலைமகள்,
கலைமகள், திருமகள்...
கொடுத்துவைத்தவள் நீ – அதனால்
எடுத்துக்கொண்டாய் ஆண்மைக்கு
இலக்கணமாம் பேரழகன் பிரபுவை
ஈருயிர் ஒருயிராய் அத்விகண்ணையும்...
அன்பும் அரவணைப்பும் ஒருங்கே பெற்றாய்
பண்பும் பாசமும் சேர்ந்தே பெற்றாய்
பார்போற்ற பல்லாண்டு வாழ்க
குன்றின்மேல் விளக்காய் ஒளிர்க....
-பங்கி மாமா/ 21.03.2015
No comments:
Post a Comment