Monday, 11 August 2008

ஒரு பள்ளிக்கூடமும் ஆறு மரணங்களும் பிற அவலங்களும்...[தொடர்ச்சி. ௧]

இப்போதைய நெய்யாறறி்ன்கரை மறைமாவட்டத்திலுள்ள கீழாரூர் என்னும் பங்கில் பணியாற்றும்போது ஆயிரத்திதொள்ளாயிரத்தி எண்பத்தி ஐந்தாம் ஆண்டு சின்னத்துறை-தூத்தூர் பள்ளிக்கூட பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர சின்னத்துறைக்கு நான் போகவேண்டுமென்று ஆயர் கேட்டுகொண்டதால் அங்கு போகவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. அப்போது தூத்தூர் பங்கில் சேவியர் அலெக்சாண்டர் இருந்தார்.
சின்னத்துறைக்கு நான் போனபிறகே, பங்கு பிரிவினையின்போது கிடைக்கவேண்டிய தொகையிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாய் முதல் முறையாக வாங்கிகொடுத்தேன். அவ்வப்போது அங்கு சில பிரச்சினைகள் வந்தபோதும் தாங்கிக்கொண்டேன். கடைசியாக இரவிபுத்தந்துறையுமாக கால்பந்து போட்டி சம்பந்தமாக நடந்த சண்டையில் ஒருதலைபட்சமாக நான் நிற்காததால் விமர்சனத்திர்க்குள்ளாகி அங்கிருந்து வெளியேறினேன்.
இதன்பிறகு வள்ளவிளையில் கொஞ்சம் நாள் இருந்தபோது அங்கே நடந்த ஆர். எஸ்.எஸ். சண்டையில் மாட்டிக்கொண்டு தவித்தேன். பிறகு எனது பாதுகாப்பு கருதி என்னை கொச்சுதுறை பாங்கில் போட்டார்கள். அங்கு நான்கரை வருட பணிக்கு பிறகு இப்போதைய நெய்யாறறி்ன்கரை மறைமாவட்ட வட்டவிளை பாங்கில் ஆறு மாதம் பணியாறறி்யபிறகு நான்கரை மாதங்கள் வாகமண் குரிசுமலை ஆசிரமத்தில் ஆன்மீக தேடலில் ஈடுபட்டேன்.
அங்கிருந்து திரும்பி வரும் நேரம் தூதூரில் பிரச்சினையாகி பங்குத்தந்தையர் இல்லாமலும், கோயில் பூட்டப்பட்டும் இருந்தபோது என்னை அங்கே அனுப்பி அந்த பிரச்சினையை தீர்த்துவைக்க கேட்டுக்கொண்டதால் அங்கும் போனேன். பிரச்சினை முடியவே, என்னையே அங்கே பங்கு பொறுப்பாகவும், பிறகு பங்குதந்தையாகவும் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறறி ஒன்றாம் ஆண்டு நியமித்தனர்.
இதே வேளையில் சின்னத்துறையில் றோபின்சன் பங்குத்தந்தையாக இருந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து மக்களையும் ஒருங்கிணைத்து பள்ளிக்கூடத்துக்கு புதிய இரண்டு கட்டிடங்கள் போட்டோம் -ஒன்று மாடி கட்டிடம். பிறகு வருடங்களாக இருந்துவந்த பள்ளிக்கூட பிரச்சினைக்கு ஒரு தீர்வு என்ற முறையில் தலைமை ஆசிரியர் பணி சின்னத்துறை செறாபின் ஆசிரியருக்கு என்றும் தாளாளர் மற்றும் மேலாளர் பதவிகள் தூத்தூர் பங்கு தந்தைக்கென்றும் இரண்டு ஊர் பங்குபேரவைகளினாலும் ஏறறுக்கொள்ளப்பட்டு, ஆயர் அவர்களாலும் உத்தரவாக்கப்பட்டது. இதன் பிறகு பள்ளிக்கூடம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.
றோபின்சன் பங்கு மாறியபோது சக்கரியாஸ் அடிகளார் சின்னத்துறைக்கு வந்தார்.
பள்ளிக்கூட விவகாரங்களெல்லாம் இரண்டு பங்கு பேரவைகளுமாக ஆலோசித்தே முடிவெடுக்கவேண்டும் என்பதால் அதற்கென ஒரு அமைப்பே இருந்தது. அதனுடைய தலைவர் சின்னத்துறை பங்குத்தந்தையும், செயலர் தூத்தூர் பங்கு தந்தையுமாவார்.
இப்படியிருக்க ஊதியம் இல்லா ஆசிரியர்களின் ஒரு பெரும் போராட்டம் தமிழ் நாடெங்கும் நடக்க அதில் எமது ஆசிரியர்களும் கலந்து கொண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் முடிவில் எழுநூற்றைம்பது பணியிடங்கள் மொத்தமாக அறிவிக்கப்பட்டன. அதில் ஐந்து எமது பள்ளிக்கும் தருவதாக சட்டமன்ற உறுப்பினர் திரு.சுந்தரதாஸ் உறுதி தர ஒரு பணியிடத்துக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என்றும் சம்மதிக்கவேண்டி வந்தது.
முப்பத்தி ஐந்துக்கும் மேற்ப்பட்ட ஊதியமில்லா ஆசிரியர்கள் உள்ள எமது பள்ளியிலிருந்து ஐந்து பேரை தேர்ந்தெடுக்க ஒன்று:ஒன்று என்ற நியதி இருந்தபோதும் பணிமூப்பு அடிப்படையில் தூதூருக்கு ஒன்றும் சின்னத்துறைக்கு நான்கும் என்று முடிவெடுத்தோம்.
ஆனால் சில அரசியல் காரணங்களால் கடைசி இரண்டு பணியிடங்களும் கிடைக்கவில்லை. இதே வருடம் [ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறறி மூன்றாம் ஆண்டு] கடைசியில் இரண்டு ஆசிரியர்கள் ஓய்வுபெறறார்கள்- உடற்ப்பயிர்ச்சி ஆசிரியர் மற்றும் இந்தி ஆசிரியர்]. சட்டமன்ற உறுப்பினரின் உறுதிப்படி கிடைக்காமல்ப்போன பணியிடத்துக்கு பதிலாக இந்த இரண்டு பணியிடங்களையும் தரவேண்டுமென்று சின்னத்துறை அடம்பிடித்தது. ஆனால் இது சரியல்ல என்று தூத்தூரும் சொல்ல அதுவே ஒரு பிரச்சினையாகி ஆயரை அணுகினர். அவரும் ஒன்று:ஒன்று என்னும் விகிதப்படி நடத்துவதே சரி என்று சொல்லிவிட்டு தற்ப்போதைய பணியிடத்தை சின்னத்துறைக்கு கொடுத்தால் நல்லது என்றும் சொல்லி பிரச்சினையை முடிக்காமால் அதற்கே முடிச்சுபோட்டதுபோல் ஆக்கிவிட்டார்!
இப்படியிருக்க கிளாடின் சின்னத்துறை பங்குக்கு வந்தார். முன்போல் இரண்டு ஊர் பள்ளிக்கூட கமிட்டி அவ்வப்போது கூடி காரியங்கள் நடத்திவந்தது. இத்தகைய ஒரு கூட்டத்தில் தலைவரை மதிக்கவில்லை என்று கிளாடின் வருத்தப்பட, நானும் சாதாரணமாக "பிஷப் அச்சாருபறம்பிலையே மதிக்காதபோது, இந்த தலைவரையா?" என்று கூறியது அவருக்கு பிடிக்காமல் வெளிநடப்பு செய்தார். உடனேயே அவருக்கு பின்னால் ஆளை அனுப்பியபோது அவர் பங்கிற்கு செல்லவில்லை என்று புரிந்துகொண்டோம். அடுத்த நாள் காலையில் பூசை முடிந்ததும் அவரை பார்க்க சென்றேன். அப்போது என்னை சற்றும் பொருட்படுத்தவில்லை என்று மட்டுமல்லாமல் தரக்குறைவாக பேசவும் செய்தார். தொடர்ந்து நான் பள்ளிக்கூடம் வந்து அங்கிருந்த சின்னத்துறை ஆசிரியரும் எனது தமிழ் ஆசிரியருமான சேவியர் அவர்களையும் திமித்தியூஸ் ஆசிரியர் மற்றும் செராபின் அவர்களையும் தெரியப்படுத்துகையில் இப்படியும் சொன்னேன்: " அவரோடு இனி எந்த உறவும் இல்லை; அவர் போகும் மோட்சத்தைவிட நரகமே எனக்கு போதும்." இதன் பிறகு அவரோடு அதிக நெருக்கம் இல்லாமலே இருந்தேன். இதையே எங்களுக்குள்ள பெரும் பிரச்சினை என்றும், இந்த கசப்பே ஊர் பிரச்சினைக்கு காரணமென்றும் சொல்வது எவ்வளவு சரி என்று நீங்களே முடிவு செய்யுங்கள். [கிளாடினுடைய குருத்துவப்பயிர்ச்சி காலத்திலும் அதன் பிறகும் என்னோடு எப்படி இருந்தான் என்று தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரியும். இதன்பிறகும், இப்போதும் அவன் என்னோடு எப்படி நடந்துகொள்கிறான் என்று பார்த்து சொல்லுங்கள். அவனது டாக்டர் பட்ட டிப்ன்சுக்கு உரோமையில் என்னை மட்டுமே அழைத்தான் என்றால், அதற்கான செலவுகளையும் அவனே செய்தான் என்றால் நான் என்னதான் சொல்ல தேவை இருக்கிறது?]

No comments: