Monday, 11 August 2008

ஒரு பள்ளிக்கூடமும் ஆறு உயிர்களும் சில அவலங்களும்...

இன்று இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதினோராம் தேதி. தற்போது நான் அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் நியூ ஜெர்சி மாநிலத்தின் கேம்டன் மறை மாவட்டத்தில் லிண்டன்வேல்டு பங்கில் தங்கி ஸ்டராட்பர்ட் கென்னடி நினைவு மருத்துவமானையில் கத்தோலிக்க குருவின் பணியாற்றுகிறேன்.
இப்படி இருக்க எனது சொந்த மறைமாவட்டமான திருவனந்தபுரத்திலிருந்து ஒரு நண்பர்-குருவானவர்- இங்கு விடுமுறைப்பணிக்காக வந்தபோது என்னை பார்க்கவும் வந்தார். அந்த சந்திப்பின்போது நடந்த உரையாடலில் தூத்தூர் பள்ளிக்கூட பிரச்சினையில் எனக்கும் கிளாடினுக்கும் இடையே உள்ள மனத்தாங்கல் தான் இத்தனைக்கும் காரணமென்று பலரும் செல்வதாக கூறினார். இதையே வேறு பலரும் சொல்ல நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே இதன் உண்மை நிலை சொல்லியாகவேண்டியிருக்கிறது. அதைத்தான் இங்கே முயற்ச்சிக்கிறேன். [தொடரும்...]

No comments: