Friday, 15 August 2008

காந்திஜியும்... மதுரையும்...

அரை ஆடை விரதம் மற்றும் அரிஜன கோவில் பிரவேசம் முதலியன தொடங்க மதுரைதான் காந்திஜிக்கு காரணமாக அமைந்தது:
ரவுலட் சட்டத்தை எதிர்த்து சத்தியாகிரகம் செய்ய தொண்டர்களை திரட்ட ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பத்தொன்பதாம் ஆண்டு மார்ச்சு மாதம் இருபத்திஆறாம் தேதி மதுரை வந்தார். இருபத்திஎட்டாம் தேதி வரை மதுரை வீதிகளில் பிரச்சாரம் செய்தார். பிறகு இரண்டாயிரத்து இருபத்தியொன்றாம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காகவும் மதுரை வந்தார். அன்றிரவு தங்குவதற்காக மேல மாசி வீதியில் கருமுத்து தியாகராஜர் செட்டியார் இல்லத்தில் தங்க வரும் வழியில்தான் பாமரமக்கள் வறுமையில் வாடுவதை கண்டார். இதனால் மனம் வெதும்பிப்போன காந்திஜி , மறுநாள் இருபத்திரண்டாம் தேதி, "வறுமையில் தவிக்கும் பாமரர்களில் நானும் ஒருவன்" என்பதை வெளிக்காட்ட 'அரை நிர்வாண விரதத்தை' இந்த வீட்டில் இருந்துதான் மேற்க்கொண்டார். அரை நிர்வாணமாக முதல் முதலாக முனிச்சாலை பொதுக்கூட்டத்தில் பேசினார். அந்த இடம்தான் இன்று "காந்தி பொட்டல்" என்றழைக்கப்படுகிறது.
சுதேசி காதர் இயக்க பிரச்சாரத்திற்காக நிதி திரட்ட மீண்டும் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி இருபத்தியேழாம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தியெட்டு முதல் முப்பது வரை மதுரை வந்தார். அகில இந்திய அரிஜன யாத்திரையின் போது ஆயிரத்திதொள்ளாயிரத்தி முப்பத்தினாலாம் ஆண்டு ஜனவரி மாதம் இருபத்திஐந்தாம் தேதி மதுரை வந்தார். அவரது எழுச்சி உரையினால் தான் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்தியொன்பது ஜூலை எட்டில் வைத்தியநாத அய்யர், காமராஜர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோயிலில் அரிஜன பிரவேசம் நடந்தது. தொடர்ந்து வந்த வழக்குகளை சமாளிக்க ராஜாஜி அரிஜன பிரவேசம் செல்லும் என்ற அவசர சட்டத்தை கொண்டுவந்தார். இதை தொடர்ந்து பழனி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற முக்கிய கோயில்களிலும் பிரவேசம் நடந்தது.
பனிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அயிரத்திதொள்ளாயிரத்தி நார்ப்பத்தியாறாம் ஆண்டு பிப்ரவரி ரண்டாம் தேதி வழிபட மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காந்திஜி வந்தார். இத்தகைய தொடர்பு காரணமாக அவர் இறந்தபிறகு முதன் முதலில் இந்தியாவிலேயே அவருக்கென மியூசியம் அமைக்கப்பட்டது. இங்கு அவர் பயன்படுத்திய மூக்குகண்ணாடி, ராட்டை, ரத்தக்கறை படிந்த காதர் துண்டு உட்பட பதினான்கு பொருட்கள் பாதுகாக்கபட்டுவருகிறது.

No comments: