Sunday, 28 September 2014

அன்னை மரியின் பிறந்தநாள் விழா...

பள்ளித்துறை
அன்னை மரியின் பிறந்தநாள் விழா...
ஞாயிறு, 07.09.2014
[எசே 33: 7-9 உரோ 13: 8-10 மத்தேயு 18: 15-20]
அன்னை மரியின் பிறந்த நாள் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்... அவளது அரவணைக்கும் அருள்கொடைகள்....
கால்வரியில் சிலுவையில் தொங்கி தம்முயிரை சமர்ப்பிக்கும் வேளையில் அவர் தந்த கடைசி உயில்தான் என்ன? ‘இதோ உன் தாய்... இதோ உம் மகன்...’ இங்கே ஒரு புதிய உறவு மலர்கின்றது... இயேசுவின் தாய் நம் தாயாக மாறுகின்றாள்.. அன்றிலிருந்து அவள் நம்மையும் தன் மக்களென ஏற்றுக்கொண்டாள்...
நமக்காக கானாவூர் திருமண விருந்து வேளையில் செய்ததுபோல் பரிந்து பேசுகிறாள்.. தண்ணீரை இரசமாக மாற்றித்தருகிறாள்...
இறைவனின் தாய் என்றறிந்தபோதும் தனது உதவி தேவைப்படும் மூதாட்டி எலிசபத்துக்கு உதவ விரைகிறாள்... அங்கேயே தங்கியிருந்து பணிவிடை செய்கிறாள்...
இன்னல்கள் பல அடைந்து குழந்தை இயசுவை பெற்றெடுக்கின்றாள்... ஏழ்மையில் அவரை வளர்க்கின்றாள்...
-   அன்னையை அதிசயம புரிபவளாக, அற்புதம் செய்பவளாகவே நாம் அறிவோம், அறிய விரும்புகிறோம்...
-   வேளாங்கண்ணி, வல்லார்பாடம், பாத்திமா, லூர்து என அனைத்தும் அதிசயங்கள்...
-   ஆனால் அவள் வாழ்க்கையில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.. அவள் மகனுக்கும்கூட...
-   குழந்தை இயேசுவை பெற்றது... குழந்தையுமாக எகிப்துக்கு ஓடிப்போனது... ஏரோது மன்னனின் வாளிலிருந்து தப்ப அனுபவித்த வேதனை... சீமோனின் தீர்க்கத்தரிசனம்... பனிரண்டு வயதில் காணாமல்ப்போன இயேசு... ‘யார் என்னுடைய தாய்’ என்ற கேள்வியும் கேலியும்... சிலுவைப்பாதை... வியாகுலத் தாய்...
-   இயேசுவும் அப்படியே... பசி.. கூரையில்லாத நிலை... கல் அப்பமாக்க சவால்... இறப்பின் முன் பயம்... கையாலாகாத நிலை...
-   பிறருக்கு உதவும் உதவிக்கரம்... கானாவூர் கல்யாணம்...
-   கடின உழைப்பின் மேன்மை...
·         அற்புதங்களை, அதிசயங்களை விரும்புகிறோம், குறிப்பாக நாம் விரும்பியது கிடைக்க, அதற்க்கான நமது முயற்சிகள் தோல்வியடையும்போது என்றெல்லாம்...
·         ஆனால் நமது பிறவியே, வாழ்க்கையே ஒரு அதிசயம், அற்புதம் என்பதை மறந்துவிடுகிறோம்... ஏன், இந்த அகிலமே ஒரு அதிசயம்தானே....
·         இவை யனைத்தையும்விட அதிசயம் உதவி தேவைப்படும் ஒருவனுக்கு உதவுவது, அதுவும் நமது உழைப்பால், முயற்ச்சியால் அது செய்யப்படும்போது...
·         ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு’, ஆம் நட்பு ஒரு அதிசயமல்லவா... தன்னலமற்ற நட்பு... இயேசுவின் நட்பு, தன்னையே பலியாக்கும் நட்பு- நண்பனுக்காக தன்னுயிரையே அளிப்பதைவிட மேலான அன்பேது.... அன்னை மரியின் அன்பு... மகனை பலிகொடுப்பது (அபிரகாம்-ஈசாக்)
·         அதுவல்லவா அன்னை மரியாள் செய்தாள், எலிசபெத்து மூதாட்டிக்கு, கானாவூர் கல்யாண விருந்து வேளையில்...
·         இவ்வாறல்லவோ அவள் மகன் இயேசுவும் செய்தது... பசித்தவருக்கு புசிக்க அப்பம் பாலுக செய்தது... நோயுற்றவர்களுக்கு ஆறுதலும் குணமும் அளித்தது... ஒடுக்கப்பாட்டோருக்கு சுதந்திரம் கிடைக்க செய்தது, ஒதுக்கி வைக்கப்பட்டோரை ஏற்றுக்கொண்டது... கடல் சீற்றம் போன்ற இயற்க்கையின் தாண்டவங்களை அடக்கியது... தீமையின் ஆள்வடிவான அகலையை அகற்றியது... கடைசியாக இறந்தவர்களை உயிர்ப்பித்தது... தாமே உயிர்த்தது....
·         இந்த வகையில்தான் அன்னையின் விண்ணேற்றத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது..
·         என இவை அனைத்தும் பிறருக்காக... தன் பிறவி, வாழ்க்கை, ஏன் இறப்புகூட நமக்காகவே...
·         நாமும், இயேசுவைப்போல், அவர் அன்னையைப்போல் பிறருக்காக வாழ்ந்து அதிசயங்கள், அற்புதங்கள் செய்வோம், வாழ்க்கையை அழகு செய்வோம்.. அருமையாக்குவோம்...
·         “வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.”
ஆக அன்னை அங்ஙனம் வாழ்ந்ததால் தெய்வத்துக்கு ஒப்பாக, ஒருவேளை அதற்கும் மேலாக இன்று போற்றப்படுகிறாள்...
-பங்கிறாஸ் அருளப்பன் 

குமாரபுரம் 07.09.2014

No comments: