இருபத்தி ஐந்தாம் தேதி: மகளே! உனக்காக நாங்கள் பட்ட வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அது வேதனையல்ல. அதிலும் ஒரு இனிமை இருக்கத்தானே செய்கிறது. போகுமுன்னே ஒருவர் பணத்துடன் வரவேற்றார். முதல் கட்டமே நிறைவாக இருந்தது. ஐந்து பங்கு கெட்ட ஒருவர் பதினைந்து பங்கிற்கு பணம் கொடுத்த அந்த விதம்தான் என்ன! பாமர மக்களின் மத்தியில்தான் எத்தனை வரவேற்பு! அவர்களின் உர்ச்சாகத்தைத்தான் என்ன என்பது! ஆம், அவர்கள் தான் படிக்காத மேதைகளோ! இவர்களை வைத்துத்தான் கிராமத்தை இந்தியாவின் இதயம் என்றாரோ காந்தியடிகள்? அவர்களின் நிறைவான உள்ளத்தில்தான் பணத்தின் மதிப்பு குறைந்ததோ. ஆம், நல்லவர்கள், தொண்டுள்ளம் கொண்டவர்கள், எதிர்கால கவலையை மறக்க செய்தவர்களின் ஆதரவுடன் பணியை தொடர்ந்தோம்.
இருபத்தியாறாம் தேதி: நம்மிடையில் ஏமாற்றங்கள் எந்த வழியில் வருகிறதென்றே தெரியவில்லை. ஒரு கவலையை மறக்கும்போது இன்னொரு கவலை. இதுதான் வாழ்க்கையா? அண்ணாவை சந்திக்க சென்ற அந்த காலத்தின் குற்றமா? அல்லது சந்திக்க சென்றவர்களின் குற்றமா அவரை மௌனக்கொலத்தில் பார்த்தது? அந்த மௌன காட்ச்சியிலும்தான் எத்தனை உறுதி! காலையில் இந்த ஒரு நிலையில் பார்த்தது என்ன ஏமாற்றம்! பாவம் அண்ணா! எங்களுக்காக அல்லும் பகலும் உழைத்து, ஊன் உறக்கமில்லாமல் ஒவ்வொரு நேரமும் சிந்தித்து செயல்படும் அவரை மனம் நோக செய்த நாங்கள் தான் குற்றவாளிகள். அவரை சிரிக்கவைக்க முயன்று அதும் பலிக்காமல் போகவே, அவரில்லாமல் எங்கள் பயணம் கல்லூரி சென்றது. ஆயிரம் பேர் வரவேற்றாலும், பணம் கொடுத்தாலும் மனதிற்கு நிறைவு வரவில்லை. உள்ளமும் உடலும் ஒரே அளவில் சோர்ந்தது, திரும்பி வந்தோம். எங்களின் இந்த நிலை கண்டு பாசமிகு அண்ணனின் உள்ளம் பற்றி எரிந்தது. சிரித்தார், பேசினார். அதில் நிறைவு கண்டோம். அவருடன் சேர்ந்து பயணம் தொடர்ந்தோம். திருப்பி அனுப்பினவர்கள் எங்களை தெருவில் கண்டார்கள், பிறகு பார்ப்போம் என்றவர்கள் எங்கள் பின்னாலே வந்தார்கள், கட்டு கட்டாக பணம் கொடுத்தார்கள், எதிர்பார்க்காத விதமாக. அனைவரும் வரவேற்றார்கள், பணம் கொடுத்தார்கள், மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டோம். புது தெம்பும் நம்பிக்கையுடனும் பீடு நடை போட்டோம்.
இருபத்தியேழாம் தேதி: ஆம், நம்பிக்கையின் உச்சக் கட்டத்தை அடைந்துவிட்டோம். 'தலைக்குமேல் தண்ணி வந்தாலும், தன்னிக்குமேல் ஓடம் உண்டு' என்ற நம்பிக்கை. இறைவனின் இரக்கம்தான் என்னவென்பது! எண்களை தேடி பணத்துடன் வந்தனர், அறிவுரை வழங்கினர். மகளே உன்னைப் பற்றித்தான் எல்லோருக்கும் என்ன அக்கறை! நீ வளரவேண்டுமென்று ஒவ்வொருவருக்கும் என்ன துடிப்பு! ஒவ்வொருவரும் தத்தம் பணிகளை நிறைவாக செய்யும் மர்மம் என்ன? எல்லாம் உனக்காக. உன் எதிர்காலம் பலரின் எழுச்சிக்கு மாதிரியாக. உன் இலட்சியத்தை எந்த நேரமும் பாதுகாத்து வாழ நாங்கள் மேற்கொள்ளும் முதற்படி...
[ஜாக்குலின் கையொப்பம் ௨௭.௧0.௯௧]
No comments:
Post a Comment