Saturday, 7 February 2009

மக்கள் பேரங்காடி... [தூத்தூர்]

பட்டங்கள் பெற்றதொன்றும் பலனளிக்கவில்லை
பலவருடம் காத்திருந்தும் பதவியொன்றுமில்லை
பார்ப்பவர்க்கு பரிதாபம், பழகுவோர்க்கு பரிகாசம்
பாதகந்தான் ஏது செய்தோம், பதிலளிப்பீர் பாவலரே!

வேலைவேண்டி வெளியுலகம் சென்றுவந்தோம்
வேண்டாத விபரீதம் பெற்றுவந்தோம்
விரக்தியுடன் வீணர்களாய் வீடுவந்தோம்
வித்யாசமான வழியொன்று முயன்றுவந்தோம்.

முயர்ச்சி திருவினையாக கண்டோம்
முறையது சுயவேலையென உணர்ந்தோம்
முறையற்ற வழியெதுவும் வேண்டாமென்றோம்
முத்தான கருத்தாக 'மக்கள் பேரங்காடி' கண்டோம்.

தொண்டுசெய்யும் பண்பெல்லாம் மறைந்துவர
தொழிலுக்காக தொண்டினையே பலர் கண்டுவர
தொண்டினையே தொழிலாக்கும் மக்கள் பலர்
தொடங்கும் இம்முயர்ச்சியினை வாழ்த்திடுவீர்.
௨௬.௧0.௧௯௯௧

No comments: