Friday, 9 May 2008

அன்பே கடவுள்...!

பகல் முடிந்தும் பாசம் தணியாது
தழைத்தோங்குதிங்கே.
நிழல்கள் தொலைந்தும் நம்பிக்கை குலையாது
பயம்கூட பறந்தோடுதிங்கே.

யாரையும் மறவாத மாதவனே
அன்பின் இதயங்களை ஆட்கொள்க.
துயிலும்போதும் துயிலெழும்போதும்
அருகிருந்து காத்தருள்க.

இருள் சூழ்ந்தாலும் அணையாத தீபமென
இரவிலும் ஜொலித்திடுக.
ஒளியிழந்த கண்களுக்கு ஒளியாக
விழியாக விரைந்து வந்திடுக.

அன்பினில் ஒன்றாகி உண்மைக்கு சான்றாகி
அன்பே இறைவனென்று
அகிலமெலாம் சாற்றிடுக
அவனருள் பெற்றிடுக.
[கட்டளை ஜெபப்பாடல்கள் தொகுப்பிலிருந்து மொழிபெயர்ப்பு]

1 comment:

Sherlock said...

இராயும்மன் பாங்கி,

எனக்கு தமிழ் கொஞ்சம் தான் தெரியும்.
உங்கள்க்கூ இந்த லைந்ஸ் கோசம் எக்ஸபிலைஞ் பண்ண முடியும?

அஞ்சுப்புதன்
ஜிஹேஷ