பங்கு - வளர்ச்சியின்
மையம்...
[தூத்தூர் பாதுகாவல்
திருவிழா...]
[மறைக்கல்வி ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்கள்]
மலாக்கி 4:1-4 எபேசியர் 4:11-16 மத்தேயு 13:24-30 [ஆறாம் நாள், ஞாயிறு, 29.06.2014]
வளர்ச்சி:
மலாக்கி 4:1-4:
ஆணவக்காரர், கொடுமை செய்வோர் (=
களைகள்...)
சூளையைப்போல் எரியும் நாள்... சூளையில் போடப்படுவார்... சருகாவர்...
சுட்டெரிக்கப்படுவர்...
உங்கள்மேல் நீதியின் கதிரவன்
எழுவான்...நீங்கள் தொழுவத்திலிருந்து வெளிவரும் கொழுத்த கன்றுகளைப்போல் துள்ளி
ஓடுவீர்கள்... [சபை, தொழுவம்
எனலாம்...]
எபேசியர் 4:11-16: ‘திருத்தூதர்கள், இறைவாக்கினர்,
நற்செய்தியாளர், ஆயர்கள் மற்றும் போதகர்கள்... திருத்தொண்டாற்ற இறைமக்களை
ஆயத்தப்படுத்தவும், கிறிதுவின் உடலை கட்டி எழுப்பவும்
ஏற்படுத்தப்பட்டனர்... இறை மகனைப்பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை
அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவை பெறுமளவுக்கு முதிர்ச்சி அடைவோம்...
அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவை போன்று எல்லாவற்றிலும்
நாம் வளரவேண்டும்... ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியை செய்வதால் உடல்
வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்பு பெற்று வளர்ச்சியடைகிறது...
மத்தேயு 13:24-30:
களைகள்- பகைவர்கள் பணி.... அறுவடைவரை வளரட்டும்...அப்போது பறித்து எரிப்பதற்கென
மாற்றலாம்...[ மலாக்கி 4:1-4:
ஆணவக்காரர், கொடுமை செய்வோர்... சூளையைப்போல் எரியும் நாள்... சூளையில்
போடப்படுவார்... சருகாவர்... சுட்டெரிக்கப்படுவர்...]
வளர்ச்சி, வசதிகள்/ஆடம்பரங்கள் அல்ல...
- கட்டில்
வாங்கலாம் தூக்கம் வாங்க முடியுமா?
- சாப்பாடு
வாங்கலாம் பசி வாங்க முடியுமா?
எனவேதான்,
‘உண்பது நாழி, உடுப்பது இரண்டு, உறைவிடம் ஒன்றே’ என தமிழ் சான்றோர்கள்
பாடிசென்றனர்...
‘எங்கே
நிம்மதி, எங்கே நிம்மதி/ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...’
‘போதும்
என்ற மனமே பொன் செய்யும் மருந்து...’
·
கதை:
இளைப்பாறும் மீனவனும் பன்னாட்டு நிறுவன பிரதிநிதியும் [நிம்மதி/நிறைவு...]
·
சுதந்திரம்/விடுதலை:
‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்...’
·
மானம்/தன்மானம்/சுயமரியாதை:
சபை –
திருச்சபை:
·
சீடர்களின் கூட்டம் (திருத்தூதர்
பணிகள்.....)
·
எருசலேம் சபை
·
திருச்சபை / வழி / நெறி....
·
சபைக்கு மூப்பர்கள்
·
அதுவும் தலத்திருச்சபை/பங்கு...
·
சீடர்களின் கூட்டம் ‘கிறிஸ்தவம்’ என
அழைக்கப்படுகின்றது.... அந்தியோக்கியாவில்...
·
சாவுலுக்கு பிறகு சபை பரவுகின்றது... வெளி
ஊர்களில், நாட்டில்....
·
உரோமா பேரரசு மூன்றாம் நூற்றாண்டில்
கிறிஸ்தவத்தை ஏற்கின்றது... கான்ஸ்தந்தீன் பேரரசின் காலத்தில்...
ஒரு
பெரிய அமைப்பு/நிறுவனம்
, உலகளாவிய அமைப்பு...:
·
மூப்பர்கள் பிரபுக்களாக்கப்படுகின்றனர்!
·
வசதியும், நிலபுலன்களும், மாளிகைகளும்,
பங்களாக்களும், செங்கோல், சிம்மாசனம், அரியணை என எல்லாம் கிடைத்தபோது அவற்றை
நியாயப்படுத்த இயேசுவையும் அரசராக்கி, அரச குருவாக்கி அமைப்பின் நிறுவனராக்கியது
பேரரசின் சபை...!
·
அதில் ஊறிப்போனவர்கள் பணிவிடையை மறந்தனர்...
ஏழ்மையை மறந்தனர்... மனிதவதாரத்தையே, அதன் அர்த்தத்தையே மறந்தனர்...
·
அந்த பெரிய, உலகளாவிய நிறுவனத்தின் கிளையாக
நமது பங்குகள், ஏன் அன்பியங்கள் கூட செயல்படுகின்றன...
-
பணிவிடை பெறவல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்
என்ற இயேசுவின் இயக்கமல்ல,
-
சீடர்கள் என்றல்ல, நண்பர்கள் என்றே
அழைத்தேன்... உங்களுள் பெரியவர் – சிறியவர் இல்லை, அனைவரும் சகோதரர்கள்,
நண்பர்கள்...
-
இது இயேசுவின் இயக்கமல்ல... நண்பர்களின்
கூட்டமுமல்ல....
-
இது முதல் திருச்சபை காலத்து ‘வழி’யோ
‘நெறி’யோ அல்ல... அமைப்பு, நிறுவனம், அரசியல், அதிகாரம், ஆதிக்கம், ஆணவம் என
அத்தனையும் சேரப்பெற்றது...
-
அந்த அமைப்புக்கான சட்டதிட்டங்கள், அதிகாரம்,
பணம், பதவி என எவ்வளவோ உண்டு... ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒப்பாகலாம்...
-
இதில் அன்புக்கு, பணிவிற்கு இடம் கிடையாது,
கிடைக்காது...
-
இந்த (குடும்பங்கள்), அன்பியங்கள் மற்றும்
பங்குகளே உண்மையான சபை...
-
தன்னைப்போல் தன் அயலானையும் நேசி... Charity begins at home…
-
தனக்குப்பிறகு குடும்பம் – இரத்த உறவு...
இயற்கை உறவு... தாய்-சேய் உறவு
-
நட்பு-சமூகம்- தேர்ந்தெடுக்கும் உறவு....
பங்கும் அதுபோன்றே....
-
அதற்கு தகுந்த செயல்பாடுகளும் தேவை....
தியாகம்.... [சுதந்திர போராட்டம்- தீவிர வாத இயக்கங்களும் தீவிரவாதிகளும்...]
o இந்த
அமைப்பு, நிறுவன கண்ணோட்டம் மாறி மந்தை-மேய்ப்பன் பாணிக்கு
திரும்பவேண்டும்... [யோவான் 21:15-19]
o கிராமங்கள்
இராமராஜ்யம் ஆகவேண்டுமென்று காந்தியடிகள் விரும்பயதுபோல், நமது
பங்குகள் இறையரசாக வேண்டும்...
o அங்கு
ஆண்டவரது சித்தம் நிறைவேறவேண்டும்...
o அநுதின
உணவு இன்றும் கிடைக்கும் பாங்கு வேண்டும்...
o பசி-பிணி
இல்லாத நிலை வேண்டும்...
o ஆண்டான்-அடிமை
இல்லாதாகவேண்டும்...
o இதுவல்லவா
வளர்ச்சி....
o அப்பம்
பங்குவைக்க/பகிர்ந்தளி(நேற்றைய
கருத்து)க்கப்படவேண்டும்... [Mt 26:26; Jn
6:11-mulitiplication; Lk 24: 30- Emmaus...; Acts 2:45; 4:35…]
‘விருந்து
புறத்திருக்க தானுண்டல் –சாவா/ மருந்தெனினும் வேண்டர்பாற்றன்று’
-
‘தனிமையிலே இனிமை காண முடியாது...’
-
இன்பம் பகிர்ந்தால் இருமடங்காகும்; துன்பம்
பகிர்ந்தால் பாதியாக குறையும்...
·
இதுவல்லாமல் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியாக
ஒரு பாதி செல்வா செழிப்பிலும் இன்னொரு பாதி வறுமையின் கொடுமையிலும் இருக்கும்
அவலம் கூடாது....
·
இயற்கையையே சூறையாடி நமது அழிவிற்கு நாமே
காரணம் ஆகக்கூடாது...
·
இயற்கையின் வளங்களை வரும் தலைமுறைக்கும்
விட்டுசெல்லவேண்டும்....
இத்தகைய வளர்ச்சி நமது பங்குகளில்
நடைமுறைக்கு கொண்டுவரப்படவேண்டும்...
அதற்கு மறைக்கல்வி ஆசிரிய-மாணவ முன்னேற்றம்
தேவை... இளைய தலைமுறை அதற்காக தங்களையே தயார்படுத்திக்கொள்ளவேண்டும்...[ எபேசியர் 4:11-16: ‘திருத்தூதர்கள், இறைவாக்கினர்,
நற்செய்தியாளர், ஆயர்கள் மற்றும் போதகர்கள்... திருத்தொண்டாற்ற இறைமக்களை
ஆயத்தப்படுத்தவும், கிறிதுவின் உடலை கட்டி எழுப்பவும்
ஏற்படுத்தப்பட்டனர்...]
No comments:
Post a Comment