வீட்டில் முதல் கல்யாணம் இது. அது கடவுளின் கிருபை என்றில்லாமல் எதோ நீங்கள் மட்டும் சாதித்ததுபோல், உங்கள் ஆங்காரத்தை, ஆணவத்தை காட்ட இதை ஒரு வாய்ப்பு என்று எண்ணி விளம்பரத்துக்காக துணியவேண்டாம். அதுவே ஒருவேளை கடவுளின், ஏழைகளின் சாபத்துக்கும் காரணமாகலாம். எளிமையும் பணிவும்தான் உண்மையில் அழகு.
காதல் புனிதமானது, கல்யாணம் புனிதமானது. இதை கொச்சைப்படுத்துவதே விளம்பரமும் வியாபாரமும். தேவை இல்லாத ஆடம்பரங்களை காட்டி எதை நிரூபிக்கபோகிறீர்கள்? "குறைகுடம் கூத்தாடும்" என்று சொல்வர்ர்களே. அப்படி உங்களையும் சொல்லவேண்டுமா? "அல்பனுக்கு ஐஸ்வர்யம் வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்கள்" என்று பிறர் கேலிபண்ணும்படி நடந்துகொள்ளவேண்டுமா? நீங்கள் நடத்த தயாராகும் ஆடம்பரங்கள் ஏழைகளுக்கு வயிறறெரிச்ச்லை உண்டாக்காதா? அதுவே மணமக்களுக்கு வாழ்த்துக்கு பதிலாக சாபமாக மாறாதா?
முதல் கல்யாணம் என்றும் நினைவில் நிர்க்கவேண்டும் என்பதற்காக இப்படி தம்பட்டம் அடிக்க ஒரு வாய்ப்பாக்கிகொள்ளலாமா? கல்யாணத்திற்கு அழகும் ஆபரணமுமாக மணமக்களே போதும் . வாழ்த்து சொல்ல உற்றார் உறவினர் நண்பர்களும் வந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும்? மணமகளுக்கு கடவுள் கொடுத்த அழகே ஏராளம். அதை மேக்கப் போட்டு, ஆபரணங்கள் அணிவித்து கெடுக்கவேண்டாம். இவை ஒன்றும் இல்லாமலே இயற்கையாக ஏற்க்கெனவே மணமகன் மணமகளை அன்பு செய்தபிறகு இன்னும் யாரை போத்யப்படுத்த இந்த ஆங்கார ஆடம்பரமெல்லாம்? இப்படி செய்தால் பெற்றோருக்கு இப்போது இருப்பதைவிட பெரிய பிரதானி ஸ்தானம் ஊரில் கிடைக்குமா? அப்படி என்றால் மணமக்களுக்கு சாபம் கிடைத்தாலும் பரவாயில்லை, என்று விட்டுவிடலாம்!
இதை எல்லாம் நாகரீகமாக யாரும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள், மாறாக அநாகரீகமாக, வெட்கக்கேடாகவே பிறர் எடுத்துக்கொள்வார்கள். இந்த அநாகரீகத்திற்கு பிறர் உடந்தையாவதா?
இந்த கல்யாணத்துக்கு மணமகளின் தந்தை பங்கு என்ன? மணமகளுக்கு அப்பா கிடையாதா? அல்ல அது வெறும் ஒரு நாள் வேடத்துக்கா? அப்பனுக்கே ஸ்தானம் இல்லாத இடத்தில் பிறர் வருவதை ஊர் உலகம் எள்ளி நகையாடாதா? எந்த வகையில் இந்த கோலாகலத்தை யார் முன்னிலையிலேல்லாம் நியாயப்படுத்துவது?
திரும்பவும் கூறுகிறேன்: "அடக்கம் அமரருள் உய்க்கும் -அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்."
சாபம் கேட்டு வாங்கவேண்டாம். வாழ்த்தை வணங்கி வேண்டுவோம், மணமக்களுக்கும் குடும்பத்துக்கும். "தாழ்ந்த இடத்தில் தான் தண்ணீர் நிற்கும்."
"ஆண்டவரை எனது உள்ளம்
போற்றி பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையை கண்ணோக்கினார்."
என்று மரியாள் பாடியதை மறக்கவேண்டாம்.
No comments:
Post a Comment