Friday, 12 July 2013

அத்விகா பி. சென் மூன்றாவது பிறந்த நாள்!

கால வெள்ளம் கடந்து போகும்-எனினும்
சில தினங்கள் மட்டும் உறைந்து நிற்கும்
அத்தகைய நாட்கள் ஓன்று -அத்வி கண்ணு
மலர்ந்த ஜூலை பதின் மூன்று.

வந்ததே அந்நாள் அத்விகண்ணு -அதை
கொண்டாடுவோம் இறைபுகழ் பாடி...

உன் மழலை-சுட்டி காணாது -திரை
கடலோடி திரவியம் தேடும் அப்பா
வீடு வரும் உறவின்றி வீதியில்-மட்டும்
உனை பார்க்கும் நிலையில் 'மாமன்'...

வந்ததே அந்நாள் அத்விகண்ணு -அதை
கொண்டாடுவோம் இறைபுகழ் பாடி...

அழகும் அறிவும் ஆற்றலும் பெற்றாய்
அனுதினம் அதையே மேம்பட செய்து
அவனிக்கென்றே அர்ப்பணம் செய்வாய்
அதற்கென நாளும் வேண்டும் மாமன்...



No comments: