உள்ளத்தை கடந்தவனாம் கடவுள்!
கடந்தவனை கட்டிப்போடவே சிலைகள்!
அவனை எங்கு கட்டினாலும்
எப்படி கட்டினாலும்
எப்போது கட்டினாலும்
அது சிலையே!
வழிபட கல்லில் கட்டலாம்
வாசிக்க வார்த்தையில் கட்டலாம்
கட்டெல்லாம் கட்டுப்பாடாகும்போது
அது கடவுளாகாது,
ஏனென்றால் அவன் கடந்தவன்,
காலங்களை, தேசங்களை
காரியங்களை, காரணங்களை,
அனைத்தையும் கடந்தவன் அவன்!
கடவுளை கட்டுப்படுத்தவே மதங்கள்!
அதுவும் அமைப்பு சார்ந்த மதங்கள்!
இயற்க்கை மதங்கள் பரவாயில்லை!
முன்னவைகளின் படைப்புக்களே
கடவுள்கள்!
இத்தகைய கடவுள்கள்
நிராகரிக்கப்படுவதுண்டு!
அதுவே நாத்திகம்!
உண்மைக்கடவுள் இருந்தால்
அவனை கட்டப்படுத்த இயலாது,
அவனை நிராகரிக்கவும் முடியாது!
அமைப்புக்களும், தலைமையும்,
அதிகாரவும், ஆடம்பரவும்
பணியாட்களும் படைகளும்
பணவும் பதவியும் எல்லாம்
இந்த போலி கடவுள்களுக்கு
அரணாக்கி, அமைப்பாக்கி
உணர்ச்சியில்லா சிலையாக்கி
வழிபடும் வாழ்விழந்தோர்
நம்மை வாழவிடமாட்டர்,
வளர விடமாட்டர்!
(தொடரும்...)
Monday, 20 September 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment