Sunday, 13 September 2015

அம்மாவும் நினைவாகினாள்...

22.08.2015 சனிக்கிழமை இரவு ஏறக்குறைய 9.15 மணிக்கு பாளையம் (திருவனந்தபுரம்) ஜூபிலி மெம்மோரியல் மருத்துவமனையில் உயிர் நீத்தாள்... யான் அனாதையாகினேன்...

அம்மா,

நீங்கள் காலத்தோடு கலந்தாலும்,

இயற்கையோடு இணைந்தாலும்,

இறைவனோடு இரண்டறக் கலந்தாலும்

சாந்தியடைக...

உயிர் தந்தாய்...
உறவு தந்தாய்...
உண்மை சொல்ல
நன்மை செய்ய
உணர்வை மதிக்க
பாமர அன்னையாக இருந்தபோதும்
பாங்காக சொல்லித் தந்தாய்
வாழ்ந்து காட்டி வழி நடத்தினாய்...

நீங்கள் வாழ்ந்த
எளிய விசுவாசத்தை
அழகிய விழுமியங்களை
வீழ்ந்துபோக விடமாட்டோம்...
வாழ்ந்து காட்டுவோம்...
உங்கள் நினைவை
நிலைக்கவைப்போம்...

நீங்காது எம்மோடிருப்பாய் தாயே...