சென்னைவாழ் குமரி முக்குவர் சங்கத்தின் குடும்ப விழாவுக்கு வாழ்த்துக்கள்....
ஒருவரது அடையாளம், தனித்தன்மை மிக முக்கியம், அவசியம். அதின்றி ஒருவரை இன்னொருவரிடமிருந்து அடையாளம் கண்டுகொள்ள இயலாது, பொறுப்பு எடுக்கவோ கொடுக்கவோ இயலாது. பொறுப்பில்லாத நிலை மனித நிலையன்று.
இந்த அடையாளம், தனித்தன்மை ஒரு நபருக்கு என்பதுபோல் ஒரு குடும்பத்துக்கு, ஒரு சமூகத்துக்கும் உண்டு. இதை ஏற்றுகொள்ளாதவரை வளர்ச்சி என்று ஒன்றை தெரிந்துகொள்ள முடியாது, உயர்வு அடையவும் முடியாது.
ஒருவருக்கு பெயர் ஒரு அடையாளம் என்பதுபோல் ஒரு சமூகத்துக்கு, சமுதாயத்துக்கு அதன் பெயர் முக்கியம். அந்த வகையில் நீங்கள் நமது சமுதாய பெயரை ஏற்று பெருமை சேர்த்துள்ளீர்கள். இனி யாரும் உங்களை, நம்மை தடுக்க முடியாது. கனவுகளை,நம் சமுதாயக்கனவுகளை நனவாக்குவோம்.
நமது தொழிலை, குலத்தொழிலை நினைத்து வெட்கப்பட என்ன இருக்கிறது? அலையோடு போராடி வாழ்கிறோம், உயிரை பணயப்படுதி உணவு மற்றும் அவசிய தேவைகளுக்காக உழைக்கிறோம். நமது தொழிலின் பெருமையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும், அதற்காக முயற்ச்சிப்போம்.
நீர் மூலப்பொருள். 'நீரின்றி அமையாது உலகம்.' 'தண்ணீர்க்குடத்தில் பிறக்கிறோம், தண்ணீர்க்கரையில் முடிக்கிறோம்...' இது இன்றைய இலக்கியம், கவிதை என்றால் பண்டைய இலக்கியங்களும் நீரின் பெருமையை போற்றத்தான் செய்கின்றது. விவிலியத்தின் தொடக்க நூலிலிருந்து யாத்திராகமம் வழி பிற நூல்களும், புராணங்களும் இதையே சாற்றுகின்றது.
மகாபாரத ஆசிரியன் வியாசன் சத்யவதி எனும் மீனவபெண்ணிடமிருந்து பராசர முனிவருக்கு பிறந்தவர்.இவளையே குரு அரசன் சந்தனுவும் விரும்பி ஹஸ்தினபுர அரண்மனைக்கு அழைத்தான், பட்டத்தரசியாக்கினான். அவர்களது வழித்தோன்றல்களே பாண்டவர்கள்... [தொடரும்...]
இயேசு இறையரசின் நற்செய்தி அறிவிக்க சீடர்களாக தேர்ந்துகொண்டது மீனவ இளைஞர்களை! கண்டங்கள் கடந்ததும் அவர்களாகவே இருக்கமுடியும், கொலம்பஸ் மற்றும் வாஸ்கோட காமா முதலியோர். நாகரீகங்கள் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் நதிக்கரைகளிலும் கடற்கரைகளிலுமே.
இன்று இன்று நாம் எல்லை காவலர்கள். நம்மை தாண்டி எவனும் இந்திய நிலப்பரப்பில் கால் எடுத்து வைக்க தயங்குவான். இந்த நாட்டின் அன்னிய செலவாணி கொண்டுவருவதில் நம் பங்கு பெரிது. புரதச்சத்து புனிதமாக தரும் மீன் நம் உழைப்பின் பயன்.
இன்னும் நம் இளைஞர்கள் தொலைத்தொடர்பு ஊடகங்களில் திறமை காட்டி கடல் கடந்து சம்பாதிக்கின்றனர். அவர்களுக்கு தெரியாத விஷயங்கள் இல்லை எனலாம், தொழில் இல்லை என்றே கூறலாம். இதை நாம் ஓரிருவர் செய்வதில் பெருமை இல்லை, மாறாக இவற்றையே சமுதாய மாற்றத்திற்காக செய்து சாதிக்கவேண்டும்.
இதை நாம் என்றோ சாதித்திருப்போம், நம்மை கிணற்று தவளைகளாக்கி வைத்திருக்கவில்லை என்றால். யார்தான் அப்படை செய்து நம்மை முடக்கிபோட்டார்கள்? வேறு யார்தான், 'தாய்' திருச்ச்சபையன்றி! தெரிந்தும், தெரியாமலும் செய்தார்கள், அமைப்புக்களை நிலை நிறுத்த, அதிகாரத்தை தக்க வைக்க, நம்மை அறிவிலிகளாக, பாமரர்களாகவே நிறுத்திக்கொண்டார்கள்.
படிக்க, மேல் படிப்பு படிக்க எந்த வசதியும் செய்து தரவில்லை, பிற சிந்தனைகள், கலாச்சாரங்கள் என ஒன்றையும் நமக்கு அறிமுகப்படுத்தவில்லை. நமது கடின உழைப்பின் பயனையே நம் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் 'அண்ணாந்து பார்க்கின்ற கோயில் கட்டினார்கள், அருகினில் ஒலைக்குடிசைகளில்' நாம் ஒதுங்க! தவறாமல் விழா எடுத்தார்கள், ஊரை பிரித்துவைத்தார்கள், போலீஸ் கேஸ் என்று நமது வியர்வையின் பயனை யாரோ தின்னக்கொடுத்தார்கள், நாம் மட்டும் பட்டினியால் வாடும்போதும்!
உலகம் வளரும்போது நாம் மட்டும் பின்தங்கி நிற்கிறோம்! நமது அண்டை மாநிலமான கேரளாவுக்கே குறைச்சல் தரும் 'பொது கழிப்பிடங்கள்' நம்மவர் நெருங்கி வாழும் கிராமங்களே (கருங்குளம் பஞ்சாயத்து). எழுத்தறிவிலும் வேறு யாரையும்விட நாமே பின்தங்கியவர்கள் (திருவனந்தபுரம் மாவட்டம், நகரமும்கூட ).
நமக்கும் எவ்வளவோ பிறகு உணர்ந்த சமுதாயங்கள் எவ்வளவோ முன்னேரியிருக்கின்ற்றனர்! நாடார்கள், ஈழவர்கள் என அனைவரும். [சாந்நார் லஹள / முலக்கச்சா சமரம்/ மாறு மறைக்கல் சமரம், ஆலய பிரவேசம், சமபந்தி....]. நமக்கோ ஏறக்குறைய ஐந்நூறு வருட ஐரோப்பிய தொடர்பும், அவர்களது இலக்கியம், அறிவியல் என எல்லாம் தெரிய வாய்ப்பிருந்தும்... நற்செய்தியின் சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் எனும் மதிப்பீடுகள் மறுக்கப்பட்டன நமக்கு. இன்றும் நாம் பின்தங்கியவர்கள் என சொல்லிக்கொள்வதில் நமது மதத்தலைமை பெருமைகொல்வதுபோல் தோன்றும்!
நமக்கு நீங்கள் இங்கே முன்னோடியாகின்றீர்கள்... நமக்கென ஓரிடம், கடலோரமாக இல்லாமல், மானகரத்தருகே.... இதை எப்போதே பிறர், குறிப்பாக சிரியன் கத்தோலிக்கர்கள் சாதித்துவிட்டார்கள், எங்கு தெரியுமா, பிற மாநிலமான கன்னடாவில், ஏன் ஆப்பிரிக்காவிலேயே ஒரு பகுதியை வாங்கி விட்டார்கள்! நமது கடற்கரைகளை வருடம் தவறாமல் கடல் விழுங்கும் சூழ்நிலையில், நாம் வேறிடம், பாதுகாப்பான இடம், முன்னேற தகுந்த இடம் சொந்தமாக்கவேண்டும். அதை சாதித்த உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.
இதோடு முடிந்துவிடவில்லை நமது பயணம்.தொடர்வோம், சாதிப்போம், நமக்காக, நமது தலைமுறைகளுக்காக. கடலை மட்டும் நம்பி வாழ்க்கையை தொலைக்காமலிருப்போம், வித்தியாசமான வேலைகள் படிப்போம், செய்வோம், வாழ்ந்து காட்டுவோம்.
போட்டு சம்பந்தமான தொழில் படிப்போம், [படகு கட்டுவோம், இயந்திரங்கள் பழுது பார்ப்போம்..], வாகனங்களும் அப்படியே, மின் இணைப்பு கொடுத்தல், பழுது பார்த்தல், ப்ளம்பிங் இன்ன பிற தொழில் கைவசமாக்குவோம். குளிர் சாதனா வசதி, மீன் பதப்படுத்துதல், மீன் சார்ந்த பிற தொழில்களும் நமதாக்குவோம்.
வங்கிகள் அமைத்து நமது செல்வத்தை நமது உயர்வுக்கும் பயன்படுத்துவோம். திருமணம், ஆடம்பர வீடு போன்றவற்றில் செல்வத்தை விரயம் செய்யாமல் இருப்போம், ஏனெனில் நம்மிடேயேயும் இருக்கிறார்கள் ஏழைகள், முதிர்க்கன்னிகள் மற்றும் வீடில்லாதவர்களும். நம்மிடேயே ஒருவன் ஏழை என்றால் நாம் அனைவருமே ஏழைகளே.
சமூக உணர்வு, அர்ப்பணம் என்றெல்லாம் வேண்டுமெனில் நாம் நிறையவே கற்கவேண்டும், குறிப்பாக சட்டம் போன்ற விஷயங்கள். சட்ட அறிவு நிச்சயம் ஒருவனை நம்பிக்கை உள்ளவனாக, மதிப்பு உள்ளவனாக ஒருவனையும் அவன் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்தும். ஏன் நமக்கென ஒரு சட்டக் கல்லூரி தொடங்கக்கூடாது? அவ்வளவு செலவிருக்காது. குமரி மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி கிடைக்க வாய்ப்பிருக்கிறது, குறிப்பாக, நமது சமுதாயத்துக்கு.
குருக்கள் கோயில்களில்மட்டும் அர்ச்சனை, ஆராதனை விஷயங்களில் ஈடுபடட்டும், அரசியல் மற்றும் சமூகவியல் காரியங்களில் பொது நிலையினருக்கு வாய்ப்பளிக்க இன்னும் ஏன் தாமதம், அவர்கள் வளரவில்லை என கூறுவது இன்னுமா ஏற்கவேண்டும்? வழிவிடுவோம், அவர்கள் நிச்சயம் நம்மை வழி நடத்துவார்கள். முடிந்தால் வாழ்த்துவோம், போற்றுவோம், தூற்றாமல் இருப்போம்.
நமது மக்களுக்கு நாம் ஒன்று மட்டும் செய்தால் போதும், மீதி எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அது இதுவே: அவர்களை சுய மரியாதை உள்ளவர்களாக, தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்றுவோம். அப்படிப்பட்டவர்கள் பிறரிடம் கையேந்தமாட்டார்கள், கை கட்டி நிற்கமாட்டார்கள். அவர்களுக்கு சாதிக்க முடியாததென்று ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. இதற்கு மேல் என்ன வேண்டும்? 'பொறுத்தது போதும் என்று பொங்கி எழுவோம்.' சாதிப்போம் வளமான வாழ்வை, சுதந்திரத்தை, நீதியை என எல்லாமும். இதல்லவா இயேசு அறிவித்த இறையரசு? இதல்லவா நற்ச்செய்தி?
முக்குவர் வாழ்க, மீனவர் வாழ்க.
முன்னேறுவோம், முன்னேற்றுவோம்.
வாருங்கள், வாழ்த்துங்கள்...
பார்ப்போம் சென்னையில், குடியரசு தினத்தன்று.
குடிகள் அரசாகும் நாளுக்காக குரல் கொடுப்போம்,
சபையில் நாம் யாருக்கும் அடிமையல்லோம்.
இயேசுவின் தந்தை நமக்கும் தந்தை
அவரது அன்னைக்கு நாமும் பிள்ளைகள்
நமக்கும் அவள் அன்னை!
அவரது நண்பர்கள் நாம்!
அரச குருத்துவ குலம் நாம்
தேர்ந்தேடுக்கப்பத்ட்ட இனம்
பணி ஏற்கவல்ல, பணி செய்யவே வந்தேன்.
அவர் வழித்தோன்றல்களுக்கு ஏன் இந்த
அதிகார வெறி? பணம், பதவி எதற்கு?
முதலில் அவரது அரசையும் அதன் நீதியையும் தேடுவோம், மீதியுள்ளதெல்லாம் நமக்கு தரப்படும். நம்புவோம், நலமடைவோம்.