தாய்மை ஒரு தவம்...
படைப்பையே
படைப்பாளியாக்கும் வரம்!
ஆண்மையும் பெண்மையும்
ஒன்றுக்கொன்று பூரணம்
அவை இரண்டறக்கலக்க
பெண்மை தாய்மையடைகிறது
மழலை மலர்கின்றது
மனங்கள் நிறைகின்றது.
அம்முவை சுமக்கும் அம்மணி நீ
ஆருயிர் அமுதாக்கண்மணி நீ
இசைபட வாழ்க இனி நாளும்
ஈக இறைவன் கொடையை
உங்கள் உறவின் உயிரை
ஊர்போற்ற பார்போற்ற
என்றும் வளர்க்க
ஏற்றம் பெறுக
ஐயம் வேண்டாம்
ஒளியாய் வளர்க
ஓசையின்றி வாழ்க
ஔவைபோல் சிறக்க...
எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!